நடிகையுடன் லிப்லாக் காட்சி.. அஜித் பட இயக்குனரால் மனைவியிடம் அடி வாங்கிய அருண் விஜய்..
தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக நடித்து அதிக கவனத்தை ஈர்த்து வரும் நடிகர் அருண் விஜய், சமீபத்தில் மிஷன் சாப்டர் 1 படத்தில் நடித்துள்ளார். கடந்த வாரம் இப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
ஆரம்பத்தில் குறைவான தியேட்டர்களில் மட்டுமே ஒளிப்பரப்பாகி வந்த நிலையில் அதன் எண்ணிக்கை தற்போது கூட்டப்பட்டிருக்கிறது.
இப்படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிகளிலும் பேட்டியும் அளித்து வரும் அருண் விஜய், தன் மனைவி ஆர்த்தியுடன் நேர்காணலில் கலந்து கொண்டு பல விசயங்களை பகிர்ந்துள்ளார்.
நடிகையுடன் இதெல்லாம் பண்ணக்கூடாது என்று சொன்னேன் என்று மனைவி தெரிவித்தார். அப்போது தடம் படத்தில் என் கண்டீசனை சொன்னேன்.
அப்படத்தில் நெருக்கமான காட்சி மனைவி இல்லாத போது எடுத்து முடித்துவிட்டேன். டிரைலர் பார்த்துவிட்டு, ஏன் என் கிட்ட அந்த காட்சி இருப்பதை சொல்லவில்லை என்று ஆர்த்தி கேட்டு அடி வாங்கியதாகவும் அருண் விஜய் தெரிவித்திருக்கிறார்.