குழந்தை பெற்றப்பின் படுஒல்லியாக மாறிய ஆர்யா மனைவி!! வைரலாகும் சாயிஷாவின் புகைப்படம்..
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வளர்ந்து வரும் சமயத்தில் ஆர்யாவை திருமணம் செய்து கொண்டு 21 வயதில் சினிமாவைவிட்டு விலகியவர் நடிகை சாயிஷா.
தெலுங்கு சினிமாவில் அகில் என்ற படத்தில் 18 வயதில் நடிகையாக அறிமுகமாகியவர் நடிகை சாயிஷா. அதன்பின் தமிழில் ஜெயம் ரவியின் வனமகன் படத்தில் கதாநாயகியாக நடித்து அனைவரையும் ஈர்த்தார்.
பின் கடைக்குட்டி சிங்கம், ஜுங்கா, கஜினிகாந்த், காப்பான் போன்ற படங்களில் நடித்து பிரபலமானார். இதன்பின் கஜினிகாந்த் படத்தில் ஆர்யாவுடன் காதல் ஏற்பட்டு தன்னுடைய 21 வயதில் திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்கு பின் சினிமாவில் இருந்து விலகி கடந்த ஆண்டு அரியானா என்ற மகளை பெற்றெடுத்தார். குழந்தை பெற்றப்பின் தன் கணவர் ஆர்யாவுடன் டெட்டி படத்தில் நடித்தார். தற்போது படுஒல்லியாக மாறி தன் மகளுடன் எடுத்த புகைப்படத்தை சாயிஷா வெளியிட்டுள்ளார்.