3 முடிச்சி போடும் போது இப்படியொரு கண்டீசன்!! அசோக் செல்வனுக்கு ஷாக் கொடுத்த நடிகை கீர்த்தி..
நடிகர் அசோக் செல்வன் கடந்த வாரம் நடிகர் அருண் பாண்டியன் மகள் கீர்த்தி பாண்டியனை காதல் திருமணம் செய்திருந்தார். திருநெல்வேலியில் பசுமை திருமணம் செய்து கொண்ட ஜோடி, சமீபத்தில் பிரபலங்களுக்கு விருந்து கொடுத்தனர்.
அசோக் செல்வன் கீர்த்தி பாண்டியன் திருமணத்தை பலர் விமர்சித்து வந்தனர். அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் உலகி அழகான பெண் என்று கூறி கீர்த்தி பாண்டியனுடன் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்தார் அசோக் செல்வன்.
கீர்த்தி பாண்டியன் நடிகையாக மட்டும் இல்லாமல் ஒரு தொழிலதிபர். ஐங்கரன் இண்டர்நேஷன்ல் நிறுவனத்தில் அப்பாவுடன் இணைந்து பங்குதாரராக இருந்து வருகிறார்.
சொந்த ஊரில் விவசாயம் செய்வதோடு பயிர்களை அறுவடை செய்து சந்தையில் விற்பனையும் செய்வது வரை எல்லாற்றையும் கற்றுத்தேர்ந்தவர்.
சமீபத்தில் திருமணத்திற்கு பின் அளித்த பேட்டியொன்றில் கீர்த்தி பாண்டியன், தாலி கட்டும்போது மூன்று முடிச்சியும் நீயே போடு என்று அசோக் செல்வனுக்கு கட்டளை போட்டதாகவும் அவரே எனக்கு மூன்று முடிச்சு போட்டதாகவும் இது தமிழ் மரபு முறைப்படி எங்கள் திருமணம் நடந்ததாகவும் ஓப்பனாக கூறியிருக்கிறார்.