இன்ஸ்டாகிராமில் மாதம் கோடிகள் சம்பாதித்த இன்ஃப்ளூயன்சர் அஷ்வனி!! திடீரென அவர் கணக்கு முடக்கம்

Kerala Instagram Social Media
By Edward Apr 12, 2026 07:41 AM GMT
Report

அஸ்வினி அஷ்

கேரளாவை சேர்ந்த சோசியல் மீடியா பிரபலமான அஸ்வனி அஷ் தான் தற்போது இணையதளங்களில் மிகப்பெரிய டாக் ஆஃப் தி டவுன். அவரின் புகைப்படம் அல்லது வீடியோவிற்கு பணம் கொட்டுகிறது என்றும் கோடிக்கணக்கில் அதனால் சம்பாதிக்கிறார் என்றும் கூறப்படுகிறது.

இன்ஸ்டாகிராமில் மாதம் கோடிகள் சம்பாதித்த இன்ஃப்ளூயன்சர் அஷ்வனி!! திடீரென அவர் கணக்கு முடக்கம் | Ashwani Ash Instagram Account Suddenly Frozen

மாதம் முழுக்க வேலை செய்தாலும் 25 ஆயிரம் ரூபாய் சம்பாதிக்க முடியவில்லை, ஆனால் இவர் சர்வசாதாரணமாக ஒரு கோடி சம்பாதிக்கிறாரே, என்று பலரும் குமுறியபடி கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.

நெட்டிசன்களின் கணக்குப்படி அஸ்வனி அஷ்ஷின் இன்ஸ்டாகிராமில் சுமார் 1.2 மில்லியன்(12 லட்சம்) ஃபாலோயர்கள் இருக்கிறார்கள். இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் 'Exclusive Subscription'-ல் ஒருவர் மாதம் சுமார் ரூ.449 கட்டணம் செலுத்த வேண்டும்.

இன்ஸ்டாகிராமில் மாதம் கோடிகள் சம்பாதித்த இன்ஃப்ளூயன்சர் அஷ்வனி!! திடீரென அவர் கணக்கு முடக்கம் | Ashwani Ash Instagram Account Suddenly Frozen

மொத்த ஃபாலோயர்களில் வெறும் 2 சதவீதம் முதல் 3 சதவீதம் பேர் சந்தாதாரராக சேர்ந்தாலே, அதாவது 25 முதல் 30 ஆயிரம் பேர் சேர்ந்தாலே ஒரு கோடி ரூபாய்க்கும் மேல் வருமானம் ஈட்டுவார். அந்தவகையில் சப்ஸ்கிரிப்ஷன் மூலம் மாதம் கோடி வருமானம் ஈட்டிய இன்ஃப்ளூயன்சராக திகழ்ந்து வருகிறார்.

கணக்கு முடக்கம்

இதுகுறித்து அஷ்வனி அஷ் இணையத்தில் டிரெண்டான நிலையில், அவருக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுத்துள்ளார்கள்.

இன்ஸ்டாகிராமில் மாதம் கோடிகள் சம்பாதித்த இன்ஃப்ளூயன்சர் அஷ்வனி!! திடீரென அவர் கணக்கு முடக்கம் | Ashwani Ash Instagram Account Suddenly Frozen

சுமார் 25 ஆயிரம் சப்ஸ்கிரைபர்ஸ் வைத்திருக்கும் அஷ்வினி மாதம் ரூ.399 செலுத்தி கண்டெண்ட்களை கொடுத்து வந்தார். இந்நிலையில் அவரது இன்ஸ்டாகிராம் கணக்கு தற்போது முடக்கப்பட்டுள்ளதாம்.

Community Guidelines மீறலா அல்லது தொழில்நுட்ப காரணமா என்பது குறித்து அதிகாரப்பூர்வ விளக்கம் இன்னும் அவர் கூறவில்லை. இதனால் அவரின் சப்ஸ்கிரைபர்கள் கடும் வேதனையில் இருப்பதாக நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள்.