சர்வதேச கிரிக்கெட்டுக்கு குட்பை சொன்ன ரவிச்சந்திரன் அஸ்வின்!! சேர்த்துள்ள சொத்து எவ்வளவு தெரியுமா?
ரவிச்சந்திரன் அஸ்வின் ஓய்வு
இந்திய அணியின் முக்கிய சுழற்பந்து வீச்சாரளாரகவும் ஆல்ரவுண்டராகவும் திகழ்ந்து வருபவர் ரவிச்சந்திரன் அஸ்வின். தமிழகத்தை சேர்ந்த அஸ்வின் எம் எஸ் தோனி தலைமையிலான பல போட்டிகளில் இந்திய அணிக்காகவும் சிஎஸ்கே அணிக்காகவும் விளையாடி பெருமை சேர்த்தவர்.
டெஸ்ட் போட்டிகளில் மட்டும் மொத்தம் 450க்கும் மேற்பட்ட விக்கெட்டுக்களை எடுத்துள்ள அஸ்வின் ஆஸ்திரேலியா அணிக்காக 3வது டெஸ்ட் முடியும் முன் தன்னுடைய ஓய்வினை அறிவித்தார்.
2014ல் எம் எஸ் தோனி ஆஸ்திரேலியா அணிக்கான 3வது டெஸ்ட்டில் எப்படி ஓய்வினை அறிவித்தாரோ அதே பாணியில் அஸ்வினும் ஓய்வினை அறித்திருத்திருப்பது பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.
சொத்து மதிப்பு
இந்நிலையில் 38 வயதாகும் அஸ்வின் கிரிக்கெட்டை தாண்டி விளம்பரங்கள், யூடியூப் சேனல் உள்ளிட்ட பலவிதங்களில் சம்பாதித்து வருகிறார். அவரது நிகர சொத்து மதிப்பு 16 மில்லியன் டாலர் என்று மதிப்பிடப்பட்டுள்ளதாம். இந்திய நிலவரப்படி அவரின் மொத்த சொத்து 132 கோடியாம்.
அவர் வசிக்கும் வீட்டின் மதிப்பு ரூ. 9 கோடி என்றும் ஆண்டு வருமானம் 10 கோடி ரூபாய் எனவும் கூறப்படுகிறது. ஐபிஎல் போட்டியில் 2025 சீசனுக்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 9.75 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது. ஏ பிரிவில் இந்திய அணியில் விளையாடி அஸ்வினுக்கு ஆண்டு சம்பளமாக 5 கோடி பெற்று வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.