40 கதை கேட்டு தூங்கிய அஸ்வினை நியாபகம் இருக்கா? வாலியால் இப்போ புலம்புறாரே..
அஸ்வின் குமார்
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரக்கு வந்த பிரபலங்களில் ஒருவர் தான் அஸ்வின் குமார். என்ன சொல்லப்போகிறாய் என்ற ஆடியோ வெளியீட்டின் போது அவர் பேசிய பேச்சால் விமர்சனத்திற்குள்ளானதோடு படவாய்ப்புகளையும் இழக்குக் சூழல் ஏற்பட்டு ஆளே காணமல் போய்விட்டார்.
விஜய் டீவியில் ஆஃபிஸ் என்ற சீரியலில் நடிக்க ஆரம்பித்து, ரெட்டை வால் குருவி, நினைக்க தெரிந்த மனமே, ராஜா ராணி என ஏகப்பட்ட சீரிகல்களில் நடித்தார்.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு மிகப்பெரிய வரவேற்பை பெற்ற அஸ்வின், என்ன சொல்லப்போகிறாய் என்ற படத்தின் ஆடியோ லான்சின் போது, எனக்கு ஒரு கெட்டப்பழக்கம் இருக்கிறது, கதை கேட்கும்போது அந்த கதை பிடிக்கவில்லை என்றால் தூங்கிவிடுப்வேன், அந்த கதைக்கு முன்னதாக 40 கதைகள் கேட்டேன்.
இந்த கதையை கேட்கும்போது தான் தூங்கவில்லை என்று பேசினார். இதனை வைத்து பலருக்கும் முகம் சுளிப்பை ஏற்படுத்தி, அவரை விமர்சித்தும் கலாய்த்தும் வந்தனர். அதிலிருந்து மீண்டு வந்த அஸ்வின், செம்பி என்ற படத்தில் நடித்து நல்ல வரவேற்பை பெற்றார்.
இந்நிலையில், தூள் பேட் என்ற் பெப் தொடரில் நடித்துள்ள அஸ்வின், அதன் பிரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வருகிறார்.

அந்த புண் எனக்கு இருந்து கொண்டேதான் இருக்கும்
அதற்காக சமீபத்தில் அவர் அளித்த பேட்டியொன்றில், கடைசிவரை அந்த புண் எனக்கு இருந்து கொண்டேதான் இருக்கும், அது போகவே போகாது, மனிதம் என்றால் என்ன என்று கேள்வி எனக்கு இருக்கும். யாரும் யாருடைய கையை பிடித்தும் அழைத்துச் செல்லவேண்டாம். நீங்கள் எத்வுமே செய்யாமல் இருந்தாலே மனிதம்தான், அதுகூட இல்லாமல் இருக்கிறோமே என்ற வருத்தம் என்று கூறியிருக்கிறார்.
மேலும் திருமணம் பற்றிய கேள்விக்கு பதிலளித்த அஸ்வின், திருமணத்தை பொறுத்தவரை நல்ல பெண் இருந்தால் போதும் என்ற எண்ணம் வந்துவிட்டது, திருமணம் எனக்கு நாளைக்கே நடக்கலாம், 10 வருடங்கள் கழித்தும் நடக்கலாம். எனக்கு போராட்டங்கள் நிறைய இருந்திருக்கிறது. என்னுடைய நண்பர்கள் இல்லை என்றால் நான் இங்கு இல்லை என்று அஸ்வின் தெரிவித்துள்ளார்.