இடுப்புக்கு மேல பிரச்சனை இருக்கு!..ஜோதிடர்களை எதிர்த்துப் பேசியதால் மாரிமுத்துக்கு செய்வினை வைத்தார்களா?

Serials Tamil TV Serials Tamil Actors Tamil Directors G. Marimuthu
By Dhiviyarajan Sep 08, 2023 10:00 AM GMT
Report

இயக்குனர், கதை ஆசிரியர், நடிகர் எனப் பல பன்முகங்களை கொண்டவர் தான் நடிகர் மாரிமுத்து. இவர் பல படங்களிலும் நடித்திருந்தாலும் சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியல் மூலம் தான் அனைத்து தரப்பு மக்கள் மத்தியில் பிரபலமானார்.

இந்நிலையில் மாரிமுத்து இன்று மாரடைப்பால் மரணம் அடைந்தார். இவரின் மரணம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இடுப்புக்கு மேல பிரச்சனை இருக்கு!..ஜோதிடர்களை எதிர்த்துப் பேசியதால் மாரிமுத்துக்கு செய்வினை வைத்தார்களா? | Astrologer Predicted Marimuthu Health Issue

எதிர்நீச்சல் சீரியல் நடிகர் மாரிமுத்து மரணம்!..ரசிகர்கள் அதிர்ச்சி.. காரணம் என்ன தெரியுமா?

எதிர்நீச்சல் சீரியல் நடிகர் மாரிமுத்து மரணம்!..ரசிகர்கள் அதிர்ச்சி.. காரணம் என்ன தெரியுமா?

சில மாதங்களுக்கு முன்பு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தமிழா தமிழா என்று நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

அதில் ஜோதிடர் ஒருவர் மாரிமுத்துவின் பிறந்த தேதி மற்றும் அவரை பற்றி முழு விவரத்தை கேட்டார். அப்போது அந்த ஜோதிடார் மாரிமுத்துவிடம், உங்களுக்கு இடுப்பிற்கு மேல் பிரச்சனை இருக்கிறது என்று கூறினார்.

அதற்கு மாரிமுத்து, வேடிக்கையாக இடுப்பிற்கு மேல் இதயம் ஓடிக் கொண்டே இருக்கிறது என்று சொன்னார்.

தற்போது மாரிமுத்து மாரடைப்பால் மரணம் அடைந்ததையும், அந்த ஜோதிடர் சொன்னதையும் இணைத்து நெட்டிசன்கள் பேசி வருகின்றனர்.

சிலர், ஜோதிடர்களை எதிர்த்துப் பேசியதால் மாரிமுத்துக்கு செய்வினை வைத்துவிட்டதாக வதந்திகளை பரப்பி வருகின்றனர்.