40 கதை சர்ச்சையால் ஆணவத்தில் ஆடிய அஸ்வின்! கடைசியில் இதுதான் நடக்கும்..

aswin cookwithcomali hariharan
By Edward Dec 17, 2021 02:00 PM GMT
Report

குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமாகியவர் அஸ்வின். இந்நிகழ்ச்சி கொடுத்த வரவேற்பால் ரசிகர்கள் மத்தியில் நல்ல இடத்தினை பிடித்தார். அதுமட்டுமில்லாமல் பல படங்களில் கமிட்டாகியும் ஆல்பம் பாடலில் நடித்தும் வந்தார்.

சமீபத்தில் என்ன சொல்ல போகிறாய் என்ற படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சர்ச்சையாக பேசியிருந்தார். 40 இயக்குனர்கள் கதை கூறியபோது தூங்கிவிட்டேன் என்று கூறியது விமர்சனத்திற்கு உள்ளானது.

இதனால் அஸ்வினை கலாய்த்தும் மீம்ஸ் கிரியேட் செய்தும் கிண்டல் செய்து வந்தனர். இந்நிலையில் என்ன சொல்ல போகிறாய் படம் வரும் கிறிஸ்மஸ் பண்டிகைக்கு முன் 24ல் வெளியாகவிருந்தது. ஆனால் இப்படம் அடுத்த ஆண்டு வெளியாகும் என்று இயக்குனர் ஹரிஹரன் கூறியுள்ளார்.

மேலும் பொங்கலுக்கு வலிமை, காதலர் தினத்தன்று காத்து வாக்குல ரெண்டு காதல் ரிலீஸ் என இருக்கையில் இப்படம் வெளியிட முடியுமா என்று கேட்டு வருகிறார்கள். ஆனால் இயக்குனர் ஹரிஹரன் ஜனவரி2022ல் வெளியாகும் என்று கூறியுள்ளார்.