அடி ரொம்ப பலமோ.. நடிகையிடம் குத்து வாங்கிய சாந்தனு! வைரல் வீடியோ

By Parthiban.A Dec 08, 2021 11:00 AM GMT
Report

நடிகர் சாந்தனு நடித்திருக்கும் முருங்கைக்காய் சிப்ஸ் படம் இந்த வார இறுதியில் திரைக்கு வருகிறது. அதில் அவருக்கு ஜோடியாக அதுல்யா ரவி நடித்திருக்கிறார். அடல்ட் கதை என்பதால் இந்த படத்திற்கு ஏ சான்றிதழ் தான் கிடைத்து இருக்கிறது.

ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட சில வீடியோக்களை தற்போது வெளியிட்டு வருகிறார் சாந்தனு. செட்டில் அதுல்யா அவரை பாக்சிங் பேக் போல குத்தும் வீடியோவை வெளியிட்டு இருக்கும் சாந்தனு "என்ன baargav இதெல்லாம்" என குறிப்பிட்டு இருக்கிறார்.

குத்து வாங்கிவிட்டு வலி தெரியாதது போல ரியாக்ஷன் கொடுத்திருக்கும் சாந்தனு வீடியோவின் இறுதியில் கொடுத்திருக்கும் ரியாக்ஷன் தான் ஹைலைட். இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

நெட்டிசன்களும் கமெண்டில் கிண்டல் செய்து வருகின்றனர். "நம்ம அடி எப்டினு காட்ட வேண்டிய நேரம் இது @KikiVijay" என சாந்தனுவின் மனைவி கிகியையும் இதில் இழுத்து விட்டிருக்கின்றனர்.