முருங்கைக்காய் சிப்ஸ் அந்த மாதிரி ‘ஏ’ படம்னு அப்போ தெரியாது.. சமாளிக்கும் அதுல்யா ரவி?

murungakkai chips Athulya Ravi
By Parthiban.A Dec 11, 2021 07:30 AM GMT
Report

சாந்தனு மற்றும் அதுல்யா ரவி நடித்து உள்ள முருங்கைக்காய் சிப்ஸ் படம் நேற்று திரைக்கு வந்திருக்கிறது. அந்த படம் அடல்ட் கன்டென்ட் என்பதால் அதற்கு ஏ சான்றிதழ் கொடுத்து இருக்கிறார்கள்.

இந்த படத்தின் கதையே முதலிரவு பற்றி தான். இப்படிப்பட்ட படங்களில் எல்லாம் எதற்காக நடிக்கிறீர்கள் என அதுல்யாவை நெட்டிசன்கள் கேட்டு வருகிறார்கள். அது பற்றி பேட்டியில் பேசி இருக்கும் அதுல்யா ரவி தான் சினிமாவில் நடக்க வந்த புதிதில் தான் இந்த படத்தில் கமிட் ஆனேன் என கூறியுள்ளார்.

இது ஏ படம் என்பது அப்போது எனக்கு தெரியாது என கூறி இருக்கிறார். கதையை கேட்ட உடனே இது என்ன படம் என்பது தெரிந்திருக்கும், அப்படி இருக்க அதுல்யா இப்படி சொல்லி சமாளிக்கிறாரே என தான் நெட்டிசன்களும் பேசி வருகின்றனர்.

ஒரு சில ரசிகர்கள், அதுல்யாவை இது போன்ற படங்களில் நடிக்க வேண்டாம் என சொல்லுங்க என அட்வைஸ் கூறி வருகின்றனர்.