என்னை உன் மனைவியா பார்க்க மாட்டாங்க!! 17 வயசு சிறுவன் ஆசைக்கு பதிலளித்த சீரியல் நடிகை...
அவந்திகா மோகன்
மலையாள சின்னத்திர சீரியல்களில் நடித்து பிரபலமான நடிகை அவந்திகா மோகன், 2015 முதல் சீரியல்களில் நடித்து வருகிறார். துபாயில் பிறந்த இவர், யக்ஷி ஃபெய்த்ஃபுல்லி யுவர்ஸ் என்ற மலையாள படத்தில் நடித்தார்.
இதன்பின் துல்கர் சல்மான் படம் உட்பட 5 படங்களிலும் தமிழ், தெலுங்கு மொழிகளில் இரு படங்களிலும் தெலுங்கில் ஒரு படத்திலும் நடித்துள்ளார்.
சிறுவன் ஆசை
இந்நிலையில், அவந்திகாவின் சோசியல் மீடியா பக்கத்தில் ஒரு 17 வயது சிறுவன் ஒரு கோரிக்கையை வைத்து அதிர்ச்சியை கொடுத்துள்ளார். அந்த சிறுவன், தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என தொந்தரவு செய்ததாகவும், என் குட்டி ரசிகன் என்று குறிப்பிட்டு நீயும் சில நாட்களாக எனக்கு மெசேஜ் அனுப்பி வருகிறார்.
நேர்மையாய் உன்னிடம் ஒன்று சொல்லவேண்டும், 16 அல்லது 17 வயது சிறுவன் நீ, வாழ்க்கை என்னவென இப்போது தான் புரிந்து கொள்ள ஆரம்பித்திருக்கும். நீ என்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என ஒரு வருடமாக மெசேஜ் அனுப்பி வருகிறாய்.
நீ திருமணத்தை பற்றி அல்ல, இப்போது உன் தேர்வுகளை பற்றி கவலைப்பட வேண்டும். என்னைவிட உனக்கு வயது குறைவு. நாம் திருமணம் செய்துகொண்டால் என்னை உன் மனைவியாக பார்க்க மாட்டார்கள், அம்மாவாக பார்ப்பார்கள்.
எனவே நீ படிப்பில் கவனம் செலுத்து, சரியான நேரத்தில் காதல் உன்னை தேடி வரும் என்று நடிகை அவந்திகா மோகன் சிறுவனிடம் கூறியதை பகிர்ந்துள்ளார்.
