என்ன கோபி பொம்மள சோக்கா! கோபியின் காத்துவாக்குல ரெண்டு காதல்..

samantha serial nayanthara baakiyalakshmi vijaysethupathi சமந்தா நயன் தாரா
By Jai Feb 11, 2022 07:20 AM GMT
Report

பிரபல தொலைக்காட்சி சேனலில் பல சீரியல்கள் மக்கள் மனதை ஈர்த்து வருகிறது. முக்கிய இடத்தினை பிடித்து வரும் சீரியல் பாக்யலட்சுமி. இல்லத்தரசிகளின் கஷ்டங்களை மையப்படுத்தி ஒளிப்பரப்பு செய்யப்படும் இந்த சீரியலில் பாக்யாவிற்கு துரோகம் செய்து காதலித்த பெண்ணுடன் ரகசிய தொடர்பில் இருந்து வருகிறார் கோபி.

ராதிகாவிற்காக மனைவி பாக்யாவை விவாகரத்து செய்யவும் தயாராகிய கோபி சமீபத்திய எபிசோட்டில் டைவர்ஸ் பத்திரத்தை எடுத்துக்கொண்டே சுற்றுகிறார். இந்நிலையில், கோபியின் கள்ளக்காதலை வைத்து இணையத்தில் ஒரு மீம்ஸ் வெளியாகி வைரலாகி வருகிறது.

விஜய் சேதுபதி, நயன் தாரா, சமந்தா நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகியுள்ள காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தின் டீசர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று போஸ்டரை வெளியிட்டுள்ளனர். அப்போஸ்டரை வைத்து கோபியை சித்தரித்தபடி இருக்கும் மீஸ்ம் வெளியாகியுள்ளது.