வேலைக்காரியை மிரட்டிய கோபி.. ஷூட்டிங் ஸ்பாட்டிலும் அவர் அப்படி தானா? வீடியோ பாருங்க
Star Vijay
Baakiyalakshmi
By Parthiban.A
விஜய் டிவியின் பாக்கியலட்சுமி தொடரில் நெகட்டிவ் கேரக்டரான கோபி கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் சதிஷ். அந்த ரோலில் நடிப்பதற்காக அவரை தமிழ்நாட்டு மக்கள் தொடர்ந்து திட்டி வருகிறார்கள்.
இது சீரியல், நான் செய்வது வெறும் நடிப்பு தான்.. திட்டாதீங்க என சமீபத்தில் கூட அவர் வீடியோ வெளியிட்டு இருந்தார்.
இந்நிலையில் பாக்கியலட்சுமி தொடரில் வேலைக்காரியாக நடித்து வரும் மீனா செல்லமுத்து ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ ஒன்றை எடுத்து வெளியிட்டு இருக்கிறார்.
அதில் அவர் ரகசியமாக ஷூட்டிங்கை வீடியோ எடுத்துக்கொண்டிருக்க கோபி வந்து அவரிடம் மிரட்டிவிட்டு போகிறார்.
வீடியோவை நீங்களே பாருங்க