ஊர் மேய போறேன்னு சொல்றது பெருமையா.. நடிகை கஸ்தூரி விமர்சனம்..
பேட் கேர்ள் படம்
இயக்குநர் வர்ஷா பரத் இயக்கத்தில் வெற்றிமாறன், அனுராக் காஷ்யப் தயாரிப்பில் பேட் கேர்ள் என்ற படம் உருவாகி அதன் டீசர் சமீபத்தில் வெளியானது. பெண் வளர்ப்பு மையப்படுத்தி எடுக்கப்பட்ட இப்படத்தின் டீசர் பலர் விமர்சித்து வரும் நிலையில், நடிகை கஸ்தூரியும் தன் பங்கிற்கு படுமோசமான விமர்சனத்தை கொடுத்துள்ளார்.
கஸ்தூரி விமர்சனம்
அதில், இந்த கதைக்களம் படத்துக்கு மிக அவசியமா? முதல்ல இப்படியொரு படமே அவசியமா?. வயசு கோளாரை பற்றி எடுக்கப்பட்ட பல தமிழ் படங்களின் கடைசி அவதாரம்தான் இந்த படம். இதுபோல் ஒரு லைட் ப்ளூ கலர் படங்கள் தான் தமிழகத்தில் முதல் முயற்சி கிடையாது, நிறைய படங்கள் வந்திருக்கிறது.
இந்த படம் பெண்ணுரிமை பற்றி பேசும் படம் அல்ல.. வயசு கோளாறை நியாயப்படுத்தக் கூடிய அல்லது வயசு கோளாறை சித்தரிக்கக்கூடிய ஒரு அசட்டு பிசட்டு படம். வாந்தி எடுக்கிற காட்சிதான் ஒன்றன்பின் ஒன்றாக வந்தது. ஒரு பெண்ணின் வயசு கோளாறை படமாக எடுப்பதே தவறுதான்..
இந்த டிரெயிலரை பார்த்தால், குட்டி மினி ப்ளூபிலிம் மாதிரி இருக்கு. முகம் சுழிக்கும் அளவுக்கு காட்சிகள் டிரெயிலரில் இருக்கு என்றும் படிக்க போற இடத்துல, ஊர் மேய போறேன்னு சொல்றதை, 2 மணி நேரம் பெருமையா படமாக எடுத்து தந்தால், அதை யாருமே விரும்ப மாட்டார்கள்.. நாட்டில் இருக்கிறதைதானே படத்தில் காட்டுகிறேன் என்றால், நாட்டில் இருப்பதையெல்லாம் நீங்க காட்டறீங்களா? என்று சகட்டுமேனிக்கு விமர்சித்து பேசியிருக்கிறார் நடிகை கஸ்தூரி.