வனிதா போன்று கெட்ட பெயர்!! சுசித்ராவுக்கு பிடித்த ஏழரை சனி.. வெளுத்து வாங்கிய பயில்வான்
சுசித்ரா
தமிழ் சினிமாவில் பல ஹிட் கொடுத்து முன்னணி பாடகியாக வலம் வந்தவர் சுசித்ரா. இவர் சுசி லீக்ஸ் என்ற ட்விட்டர் பக்கம் மூலமாக மிகவும் பிரபலமானார்.அவர் கரியர் பீக்கில் சென்று கொண்டிருந்தபோது பல சர்ச்சைகளுக்கு ஆளானார்.
பிறகு, சிறிது காலம் அமைதியாக இருந்த சுசித்ரா மீண்டும் பேட்டிகளில் கலந்து கொண்டு பல நட்சத்திரங்களின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பேசி வருகிறார்.
சமீபத்தில், சண்முகம் என்பவரை காதலித்து வந்ததாகவும், அவர் தன்னை ஏமாற்றி பணம் மொத்தத்தையும் சுருட்டிவிட்டார் என்றும் தெரிவித்திருந்தார்.
ஏழரை சனி
இந்நிலையில், தற்போது சுசித்ரா குறித்து பயில்வான் பேட்டி ஒன்றில் பேசிய விஷயம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதில், " பாடகி சுசித்ரா ஒரு வருடத்திற்கு முன் என்னிடம் வழக்கறிஞர் ஒருவரை திருமணம் செய்து கொண்டு இருப்பதாக சொன்னார். இதெல்லாம் தேவையா என்று நான் கேட்டேன்.
சுசித்ரா அந்த வீடியோவில் என் பெயரை சொன்னது பப்ளிசிட்டியாக கூட இருக்கலாம். அனைத்தும் தெரிந்த இவர் உலக நியாயம் அனைத்தையும் தெரிந்த சுசித்ரா இப்படி ஏமாந்து விட்டேன் என்று சொல்வதை ஏற்றுக்கொள்ளவே முடியாது.
தவளை தன் வாயால் கெடும் என்று சொல்வார்கள், வனிதா விஜயகுமார் போல, அனைவரிடத்திலும் சுசித்ரா கெட்ட பெயர் எடுத்து வருகிறார். சித்ராவை தற்போது ஏழரை சனி பிடித்து ஆட்டுகிறது" என்று தெரிவித்துள்ளார்.