திருமணமாகி குழந்தை இருக்கும் போது இசையமைப்பாளருடன் கள்ளத்தொடர்பு!! நடிகர் பாலா மனைவியின் ரகசியத்தை உடைத்த நண்பர்...
நடிகர் அஜித் நடிப்பில் இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளியான படம் வீரம். இப்படத்தில் அஜித்திற்கு தம்பிகளாக நடித்தவர்கள் ஒருவர் நடிகர் பாலா. மலையாள சினிமாவில் பல படங்களில் நடித்து நல்ல வரவேற்பை பெற்ற பாலா 2010ல் பாடகி அம்ருதா சுரேஷ் என்பவரை திருமணம் செய்து பெண் குழந்தையை பெற்றெடுத்தார்.
அதன்பின் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட 9 ஆண்டு திருமண வாழ்க்கையில் விவாகரத்து செய்து பிரிந்துவிட்டார். அதன்பின் அம்ருதா இசையமையாளர் கோபி சுந்தர் என்பவரை இரண்டாம் திருமணம் செய்து கொண்டார்.
சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் நடிகர் பாலா, நானும் அம்ருதா சுரேஷும் காதலித்து திருமணம் செய்தது உண்மை தான். விவாகரத்துக்கு காரணமே கோபி சுந்தர் தான்.
இந்த விசயம் குறித்து பொது இடத்தில் பகிர எனக்கு விருப்பம் இல்லை என்றும் உண்மைகளை பேசினால் என் மகளின் எதிர்காலம் பாதிப்படையும் என்று நினைத்து தான் வாயை மூடி மெளனமாக இருந்தேன், இதை தொடர்ந்து நான் பேசினால் என் மகளை கூட பார்க்கவிடமாட்டார்கள் என்று கண்ணீருடன் கருத்தினை கூறியிருக்கிறார் நடிகர் பாலா.
மேலும் பாலாவின் நண்பர் ஒருவர், பாலா இது குறித்து பலமுறை தன்னிடம் கூறியதாகவும் பொதுவெளியில் இப்படி பேசுவார் என்று எனக்கு தெரியாது. தன் மகளை பார்க்காமல் இருப்பது அவருக்கு வேதனையாக இருந்திருக்கலாம். அதனால் தான் அப்படி உண்மைகளை கூறிவிட்டார் என்றும் தெரிவித்தார்.
மேலும், பாலா இன்னும் வெளியில் சொல்லாத உண்மைகள் அதிகம் இருப்பதாகவும் உண்மைகளை சொன்னால் மகளின் எதிர்காலம் பாதிப்பாகும் என்பதால் அதை சொல்லாமல் இருக்கிறார் என்றும் பாலா நண்பர் சாய் கிருஷ்ணா குறிப்பிட்டுள்ளார்.