IAS அதிகாரியை அந்த வார்த்தையில் திட்டிய பாலா.. இவ்வளவு தான் மரியாதையா
இயக்குனர் பாலா சில சமயங்களில் சிலரிடம் கடுமையாக சந்துகொண்டதாக பல செய்திகள் இதுவரை வெளிவந்துள்ளன. ஏன், நடிகர்களிடம் அவர் அப்படி தான் நடந்துகொள்வார் என தமிழ் சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது.
இந்நிலையில், ஒரு முறை பாலாவிடம் நடிக்க வாய்ப்பு கேட்டு IAS அதிகாரி ஒருவர் சென்றுள்ளார். பாலா சார் சிறுது நேரத்தில் வந்துவிடுவார் வெயிட் பண்ணுங்க என்று அவரிடம் அலுவலகத்தில் இருந்த ராமகிருஷ்ணன் என்பவர் கூறியுள்ளார்.
அப்போது இயக்குனர் பாலா வரும் நேரத்தில் அந்த IAS அதிகாரியை பார்த்து "யார் இந்த *****" என்று பாலா கேட்டுள்ளாராம். இதனால் அந்த அதிகாரி சற்று ஷாக்காகியுள்ளார். இதன்பின் 'நீ ஒழுங்கா நடிக்கலனா கொரவளைய புடிச்சு கடிச்சிருவேன்' என பாலா கூறியுள்ளார்.
இதன்பின் வெளியே வந்த IAS அதிகாரி அலுவலகத்தில் இருந்த ராமகிருஷ்ணனிடம் ' எனக்கு நடிப்பு வேண்டாம், பென்சன் வாங்கிக்கொண்டு வீட்டிலேயே இருந்து விடுகிறேன் ' என்று கூறினாராம். இப்படி வாய்ப்பு கேட்டு வந்தவரை அசிங்கப்படுத்தி அனுப்பியுள்ளார் பாலா.