அது இல்லன்னு மூஞ்சு முன்னாடியே சொல்லி இருக்காங்க!! பாலு மகேந்திராவின் மகள் ஓப்பன் டாக்..
தமிழ் சினிமாவில் 80-களில் லிஜெண்ட் இயக்குனராக திகழ்ந்தவர்களில் ஒருவர் பாலு மகேந்திரா. முன்னணி நடிகர்களை உயரத்தில் கொண்டு சென்று பார்த்தவர் தான் அவர். மூன்று திருமணங்களை செய்து கொண்டார் பாலு மகேந்திரா. 963ல் அகிலேஷ்வரி என்பவரை திருமணம் செய்த பாலு மகேந்திரா ஷோபாவிடம் ரகசியமாக உறவில் இருந்தார். இதன்பின் அகிலேஷ்வரி பாலு மகேந்திராவை விவாகரத்து செய்து பிரிந்தார்.
மனைவி சங்கீதாவுடன் விவாகரத்து சர்ச்சை! பிறந்தநாள் கொண்டாட்டத்தில் மகன் சஞ்சய், மகள் திவ்யாவுடன் விஜய்
அதன்பின் 1978ல் ஷோபாவை திருமணம் செய்தார். திருமணமான இரண்டு வருடத்தில் ஷோபா தற்கொலை செய்து மறைந்தார். 18 ஆண்டுகள் தனியாக இருந்த பாலு மகேந்திரா 1998ல் மவுனிக்காவை திருமணம் செய்து கொண்டார். 2014ல் உடல் நலக்குறைவால் மரணமடைந்தார்.
இந்நிலையில் பாலு மகேந்திரா தத்தெடுத்து வளர்த்த மகள் சக்தி மகேந்திரா சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் பல விசயங்களை கூறி மனம் உருகி பேசியிருந்தார். மேலும் ஒரு பேட்டியில் கலந்து கொண்டு பேசிய சக்தி, படத்திற்கான ஆடிஷனுக்கு போகும் போது, எல்லாமே புடிச்சிருக்கும், ஆனால் நான் அழகா இல்லை, எங்களுக்கு ரொம்ப அழகா வேணும் என்று சொல்லுவாங்க.
ஸ்பாட்டுக்கே போகும் போது நடிக்க தெரிலன்னு அனுப்பி இருக்காங்க. நான் அழகா இல்லன்னா, அப்பாவுக்கு என்னை பிடிக்காது, அவருக்கு தேசிய விருது வாங்கனும்னு ஆசை இருந்துச்சி. நான் அழகா இல்லைன்னா அப்படி அப்பா சொல்லி இருக்க மாட்டாரு. மேலும் பேசிய சக்தி, எனக்கு யாரும் மிரட்டல் விடல, நான் பாதுகாப்பாக தான் இருந்தேன். அவருக்கு என் கண்ணு ரொம்ப பிடிக்கும் என்று பாலு மகேந்திரா மகள் சக்தி கூறியிருக்கிறார்.