போதையில் கற்பை இழந்து கர்ப்பமான வெண்பா.. இப்போது செய்த மோசமான காரியம்!
விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா சீரியல் வில்லி வெண்பா இத்தனை நாள் கண்ணம்மாவை எப்படியாவது தீர்த்து கட்டிவிட வேண்டும் என்று தான் பல விஷயங்கள் செய்து கொண்டிருந்தார். ஆனால் தற்போது அவருக்கே ஒரு பெரிய பிரச்சனை வந்திருக்கிறது.
கர்ப்பம்
வெண்பாவுக்கு ரோஹித் உடன் திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்திருக்கிறது. இந்த நிலையில் அவர் குடிபோதையில் இருக்கும் போது அவனிடமே கற்பை இழந்து தற்போது கர்பமாகிவிட்டார்.
ஆனால் எப்படியாவது பாரதியை திருமணம் செய்ய வேண்டும் என்கிற ஆசையில் பாரதியிடம் சென்று கெஞ்சுகிறார். 'யாரோ குழந்தைக்கு நான் அப்பா ஆகணுமா' என பாரதி கேவலமாக வெண்பாவை திட்டுகிறார்.

வெண்பா செய்த காரியம்
வெண்பா அதற்க்கு பிறகு அவரது வீட்டில் விஷம் குடிப்பது போல காட்சிகள் தற்போது வந்திருக்கிறது. அவரை காப்பாற்றுவதற்காக பாரதி வந்து தூக்கி செல்கிறார்.
இந்த பிரச்சனை எங்கே சென்று முடியப்போகிறதோ.. இதுவும் வெண்பாவின் ட்ராமாவா?
இதுல ஏதோ சூழ்ச்சி இருக்குமோ? ?
— Vijay Television (@vijaytelevision) September 30, 2022
பாரதி கண்ணம்மா - திங்கள் முதல் சனி இரவு 9 மணிக்கு நம்ம விஜய் டிவில #BarathiKannamma #VijayTelevision pic.twitter.com/gQvf5UqEGr