ஓரே மேடையில் கூப்டு இப்படியா செய்வது! பயின்வானை வெச்சு செஞ்த தயாரிப்பாளர்

Bayilvan Ranganathan
By Edward Jul 13, 2022 01:30 PM GMT
Report

நடிகரும் பத்திரிக்கையாளருமான பயில்வான் ரங்கநாதன் சமீபத்தில் யூடியூப்பில் பேசி வரும் கருத்துக்களும் நட்சத்திரங்களில் அந்த விசயங்களும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. அப்படி பேசி வரும் அவரை எதிர்த்து பலர் புகாரளித்து கண்ட பேச்சை அளித்தும் வருகிறார்கள்.

அவரின் செயல்பாடுகள் குறித்து தயாரிப்பாளர் கே ராஜன் கடுமையாக திட்டி சமீபத்தில் பேசி வருகிறார். இந்நிலையில் தூண்டுதல் என்ற படத்தின் நிகழ்ச்சி ஒன்றில் கே ராஜன் அவர்களையும் பயில்வான் அவர்களையும் வரவழைத்து பேச வைத்துள்ளனர்.

படத்தின் பிரமோஷனுக்காக பயில்வானையும் கே ராஜனையும் ஒரே மேடையில் உட்கார வைத்துள்ளனர் படக்குழு. இதையடுத்து பேசிய கே ராஜன் அவர்கள் பயில்வானை விமர்சிப்பது போல் மறைமுகமாக தாக்கி பேசி வந்தார்.

ஒரு கட்டத்தில் அசிங்கப்படுத்தும் படியான விசயங்களை ஆர்வமிகுதியில் பேசியது அங்கிருப்பவர்களை வியக்க வைத்துள்ளது. தன்னை தான் இப்படி பேசுகிறார் என்று தெரிந்தும் பயில்வான் அமைதியுடன் காத்திருந்தார்.

பின் பயில்வான் மேடையில் பேச போகும் போது தயாரிப்பாளர் கே ராஜன் அவர்கள் மேடையை விட்டு இறங்கி சென்றுள்ளார். இதன்பின் பேசிய பயில்வான் ரங்கநாதன் என்னை உயர்த்தி ஆதரவு கொடுத்து வரும் ரசிகர்களுக்கு நன்றி. நான் எப்போது உண்மையைத்தான் கூறி வருகிறேன்.

அதனால் தான் என்னை ரசிகர்கள் நம்புகிறார்கள் என்று கே ராஜனுக்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் பேசியிருந்தார். இந்நிகழ்வு நடைபெறும் போது சிறு சலசப்பை ஏற்படுத்தியிருக்கிறது. என்னால் தான் இருந்தாலும் படக்குழுவிற்கு பப்ளிசிட்டி கிடைத்துள்ளது என்று நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகிறார்கள்.