பொது இடத்தில் கன்னத்தில் பளார் விட்ட நடிகை ராதிகா? உண்மையை உடைத்த பிரபல நடிகர்..

radhikasarathkumar tamilactress bayilvan
By Edward Mar 17, 2022 08:40 AM GMT
Report

சினிமாவில் நட்சத்திரங்களின் அந்தரங்க விஷயங்கள் மற்றும் தனிப்பட்ட விஷயங்கள் இணையத்தில் எப்படியாவது வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தும். அதில் சில பத்திரிக்கையாளர்கள் ஆதாரத்துடன் இணையத்தில் லீக் செய்து விடுவார்கள்.

அப்படி தமிழ் சினிமாவின் நட்சத்திரங்களின் அந்தரங்க விஷயங்களை வெளிப்படையாக பயமில்லாமல் உண்மைகளை உடைத்து வருகிறார் நடிகரும் பத்திரிக்கையாளருமான பயில்வான் ரங்கநாதன். சமீபத்தில் நடிகை ராதிகா தொடர்பான சில விஷயங்களை கூறி வருகிறார்.

இந்நிலையில் தன்னை ராதிகா பொது இடத்தில் கன்னத்தில் அடித்தாரா என்ற கேள்வி எழுந்து வந்துள்ளது. இதற்கு பதிலளித்த பயில்வான், தினமும் நான் என் ஓய்வு பெற்ற போலிஸ் நண்பர்களுடன் காலையில் நடைபெயற்சி செய்வேன்.

அப்போது என்னிடம் வந்த ராதிகா தகாதமுறையில் நடந்து திட்டினார். அதற்கு நான் நான் பேசியது தவறாக இருந்தால் என்மீது வழக்கு போடுங்கள் என்று அமைதியாக பதிலளித்தேன் என்று குறிப்பிட்டுள்ளார்.