ஓவியா அப்படி ட்ரெஸ் போட்டால்.. நான் இப்படி தான் பேசுவேன்: பயில்வான்

Oviya
By Parthiban.A May 09, 2022 06:00 PM GMT
Report

சினிமாத்துறையில் நடிகர் நடிகைகள் பற்றி பல அந்தரங்க விஷயங்களை பேசி பரபரப்பை ஏற்படுத்தி வருபவர் பயில்வான் ரங்கநாதன். அவர் மீது கே.ராஜன் என்ற தயாரிப்பாளர் போலீசில் புகார் அளித்து இருந்தார். அவர் நடிகைகளை மிரட்டி பணம் வாங்குகிறார் என குற்றம்சாட்ட பட்ட நிலையில் அதற்கு விளக்கம் தர சென்னை கமிஷனர் அலுவலகம் வந்தார் பயில்வான்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர் தனக்கு 71 வயது ஆகிறது எங்கும், சினிமாவில் 40 வருட அனுபவம் இருக்கிறது என்றும், அதில் தெரிந்துகொண்டதை தான் youtube பேட்டிகளில் தெரிவித்து வருகிறேன் என கூறி இருக்கிறார்.

'ஓவியா தான் எப்படி வேண்டுமானாலும் உடை அணிவேன்.. அது என் இஷ்டம்' என சொல்கிறார், அது அவர் உரிமை என்றால் அதை பற்றி பேசுவது என் உரிமை என பயில்வான் கூறி இருக்கிறார்.

"மேலும் சில நடிகைகள் என்னிடம் வந்து தங்களை பற்றி கிசுகிசு எதாவது பேசுங்கள், அப்போது தான் என்னை பற்றி செய்தி வரும் என்று கூட சொல்கிறார்கள்.. அதை கூட நான் செய்திருக்கிறேன்" என பயில்வான் ரங்கநாதன் கூறி இருக்கிறார்.