ரஜினியின் சூப்பர்ஸ்டார் பட்டத்தை திருடுகிறார்கள்.. கோபத்தில் கொந்தளித்த பிரபலம்
விஜய் - ரஜினி
இந்த காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் அதிக ரசிகர் கூட்டத்தை வைத்திருப்பவர் தளபதி விஜய். இவர் நடிப்பில் வெளியாகும் படங்களுக்கு தமிழ் நாட்டில் நல்ல வரவேற்பு கிடைக்கும்.
சமீபத்தில் வாரிசு படம் வெளியாகி சில நாட்களிலேயே பிரமாண்ட வசூல் சாதனையை செய்தது. இப்படத்தில் சரத்குமார், ஷாம், ரஷ்மிகா மந்தனா என பலரும் நடித்திருந்தனர்.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் 'விஜய் தான் தற்போதைய சூப்பர்ஸ்டார்' என்று சரத்குமார் மேடையில் பேசியுள்ளார். சிலர் இதற்க்கு ஆதரவாகவும், சிலர் எதிராகவும் பேசினார்.
இதைதொடர்ந்து பிரபல பத்திரிகையாளரான பயில்வான் ரங்கநாதன் சூப்பர்ஸ்டார் பட்டத்தை குறித்து பேசியுள்ளார். அதில் அவர், "சூப்பர்ஸ்டார் பட்டம் ரஜினிக்கு மட்டும் தான் பொருந்தும்” என கூறியுள்ளார்.
எதற்கு திருடனும்?
இந்த பட்டத்தை எதற்கு திருடனும்?. ரஜினிகாந்த ஓய்வு பெறாமல் படங்களில் ஆக்ட்டிவாக நடித்து வரும் இந்த காலகட்டத்தில் விஜய்க்கு சூப்பர்ஸ்டார் பட்டம் கொடுப்பது சரியான செயல் கிடையாது.
இந்த பிரச்சனையை குறித்து நடிகர் விஜய் எதாவது மேடையில் 'ரஜினிகாந்த தான் சூப்பர்ஸ்டார்' என்று கூற வேண்டும். அப்போது தான் இந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும் என்று கூறியுள்ளார்.