பேச்சா பேசினீங்க பயில்வான்? பொய் சொல்ல நயன்தாரா தான் கிடைச்சாங்களா?
தமிழ் சினிமாவில் நட்சத்திரங்கள் தங்களின் தனிப்பட்ட விஷயங்களை சிலர் மறைத்தும் பலர் வெளிப்படையாகவும் செய்து வருவதுண்டு. அதை சிலர் காணாமலே அது உண்மை என்று கூறி வதந்திகளை பரப்புவார்கள்.
அப்படி இணையத்தில் சினிமா சம்பந்தப்பட்ட நட்சத்திரங்களின் அந்தரங்க விஷயங்களை வெளிப்படையாக கூறி வருகிறார் நடிகரும் பத்திரிக்கையாளருமான பயில்வான் ரங்கநாதன். எம்ஜிஆர் முதல் விஜய், அஜித், சிம்பு, தனுஷ் விவாகரத்து வரை அவர்களின் ரகசிய தொடர்புகளை பகிர்ந்து வருகிறார்.
இதற்கு பலர் கண்டனம் தெரிவித்து வந்தனர். ஆனால், சம்பந்தப்படுத்தி பேசியவர்கள் போலிசில் இதுவரை யாருமே புகாரளிக்கவில்லையே என்ற கேள்வி தான் பயில்வான் விமர்சனங்களுக்கு பதில் கூறி வருகிறார்.
இந்நிலையில் சமீபத்தில் பெண்களை பற்றிய அருவறுக்கத்தக்க வார்த்தையை கூறி சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தார். இது தொடர்பாக போலிசிலும் புகாரளிக்கப்பட்டது.
நயன் தாரா திருமணம்:-
அப்படியிருக்கையில் திருமணமாகாத நடிகை நயன் தாரா பற்றிய ஒரு செய்தியை பரப்பியுள்ளார். நயன் தாராவிற்கும் விக்னேஷ் சிவனுக்கும் கூடிய சீக்கிரமே காதல் திருமணம் நடைபெறவுள்ளதாகவும், தன்னுடைய மார்க்கெட் இறங்காமல் இருக்க விக்னேஷ் சிவனுக்கு சில கண்டீசன் போட்டுள்ளார் என்று கூறியுள்ளார்.
அதாவது திருமணத்திற்கு பிறகு குழந்தையை வாடகைத் தாய் மூலம் பெற்றுக்கொள்ளலாம் என்று நயன் விக்னேஷ் சிவனிடம் தெரிவித்ததாக கூறியுள்ளார்.
பிரிய ஆசைப்படும் நயன் தாரா? அப்போ அதெல்லாம் கிடையாதா என ஏங்கும் காதல் இயக்குனர்.