திரிஷாவை விட அவர் அம்மா சூப்பர் ஃபிகர்.. மோசமாக பேசிய பிரபல நடிகர்..

Trisha Gossip Today Bayilvan Ranganathan Tamil Actress
By Edward Mar 14, 2024 04:45 PM GMT
Report

தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை திரிஷா சில ஆண்டுகளுக்கு முன் சினிமாவில் வாய்ப்பில்லாமல் இருந்து வந்தார். அதன்பின் 96, பொன்னியின் செல்வன் போன்ற படங்களில் ரீஎண்ட்ரி கொடுத்து நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். பல ஆண்டுகள் கழித்து விஜய்யுடன் லியோ படத்தில் நடித்ததோடு முத்தக்காட்சியில் நடித்தும் பரபரப்பை ஏற்படுத்தினார்.

திரிஷாவை விட அவர் அம்மா சூப்பர் ஃபிகர்.. மோசமாக பேசிய பிரபல நடிகர்.. | Bayilvan Ranganathan Talk About Trisha Mom Beauty

இதன்பின் அஜித்தின் விடாமுயற்சி, கமல் ஹாசனின் தங்க் லைஃப் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இதற்கிடையில் நடிகர் மன்சூர் அலிகான் மோசமான விமர்சித்து பேசியதும் அரசியல் பிரமுகர் கூவத்தூர் ரெசாட்டில் ஒரு நாளைக்கு 25 லட்சத்திற்கு வரவழைக்கப்பட்டார் என்ற சர்ச்சையில் சிக்கினார். இதனை கண்டித்து நடிகை திரிஷா அறிக்கையும் விட்டு வந்தார்.

இந்நிலையில், சினிமா நட்சத்திரங்களின் அந்தரங்க விசயங்களை பகிர்ந்து வரும் பயில்வான் நடிகை திரிஷா குறித்த தகவல் ஒன்றினை கூறி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார். திருமண வயதை தாண்டியும் திரிஷா, அனுஷ்கா உள்ளிட்ட பல நடிகைகள் திருமணம் செய்யாமல் வாழ்ந்து வருகிறார்கள். ஆனால் மார்க்கெட்டின் உச்சத்தில் இருக்கிறார்கள்.

திரிஷாவை விட அவர் அம்மா சூப்பர் ஃபிகர்.. மோசமாக பேசிய பிரபல நடிகர்.. | Bayilvan Ranganathan Talk About Trisha Mom Beauty

அவர்களுக்கு திருமணம் ஆகாமல் இருக்க காரணம் என்பது ஒவ்வொருவருக்கும் பல காரணம் உள்ளது. நிச்சயம் முடிந்து திருமணம் வரை சென்றும் திரிஷாவுக்கு நின்று போனது. சினிமா நடிகர் ஒருவரால் காதலிக்கப்பட்டு ஏமாற்றப்பட்டாஅர் திரிஷா. இதில் முக்கிய விசயம் என்னவென்றால் நடிகை திரிஷாவை விட அவரது அம்மா மிகவும் அழகாக இருப்பார் என்று கூச்சமில்லாமல் கூறியது தற்போது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

GalleryGallery