அவங்க இல்லன்னா நயன்தாராவால ஒன்னும் புடுங்க முடியாது!! கேவலப்படுத்திய பயில்வான்..
தென்னிந்திய சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து வருபவர் நடிகை நயன் தாரா. அவர் நடிப்பில் கடந்த 22 ஆம் தேதி கனெக்ட் படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது.

நயன் தாரா
விக்னேஷ் சிவனை திருமணம் செய்து வாடகைத்தாய் மூலம் இரட்டை குழந்தை பெற்றப்பின் பல படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்து வருகிறார் நயன் தாரா. தன்னுடைய ரெளடி பிச்சர்ஸ் தயாரிப்பில் உருவான கனெக்ட் படத்தின் பிரமோஷனுக்காக ப்ரீ ரிலீஸ், டிடி-யுடன் நேர்காணல் பேட்டி என கொடுத்திருந்தார்.
தன்னுடைய தயாரிப்பு படங்களுக்கு மட்டும் பிரமோஷனுக்கு செல்லும் நயன் தாரா மற்ற தயாரிப்பாளர்கள் தயாரித்த படங்களுக்கு பிரமோஷனுக்கு செல்லாமல் இருந்து வருவது விமர்சனத்திற்குள்ளானது.

பயில்வான் ரங்கநாதன்
இதுகுறித்து பயில்வான் ரங்கநாதன் கடுமையாக விமர்சித்துள்ளார். பத்திரிக்கையாளர்களை சந்திக்க பயப்படுகிறார் நயன் தாரா. ஆடியோ லான்ச் கூட கனெக்ட் படத்திற்கு நடக்கவில்லை என்று கூறியிருக்கிறார். ஒரு நடிகை எதையும் சமாளிக்க கற்றுக்கொள்ள வேண்டும்.
அப்படி பல பிரச்சனைகளை சமாளிக்கும் நயன் தாரா ஏன் பத்திரிக்கையாளர்களை சந்திக்க மறுத்து வருகிறார். அப்போதைய காலத்தில் நானே பலமுறை கேள்வி கேட்டு இருக்கிறேன். திருமணத்திற்கு பிறகு சினிமாவில் நடிக்க போகும் நயன் தாராவுக்கு பத்திரிக்கையாளர்கள் தயவு தேவை.
பத்திரிக்கையாளர்கள் தயவில்லாமல் எந்த நடிகையும் நடிகரும் வளரே முடியாது. ஐய்யா படத்தில் எப்படி பவ்யமாக நடந்து கொண்டீர்களோ அதே போல் பத்திரிக்கையாளரிடம் தற்போதும் நடந்து கொள்ளவேண்டும் என்று கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார்.