நடிகைகளை பத்தி கேவலமாக பேச இவ்வளவு காசு வாங்கும் பயில்வான்!! உண்மையை உடைத்த நடிகை..

Shakeela Bayilvan Ranganathan
By Edward Apr 21, 2023 11:30 AM GMT
Report

சினிமாவில் இருக்கும் நட்சத்திரங்களின் அந்தரங்கம் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையை பற்றி அவதூறான வார்த்தைகளை பயன்படுத்தி அசிங்கப்படுத்தி வருகிறார் பயில்வான் ரங்கநாதன்.

இதற்கு பலர் கண்டங்களை தெரிவித்து திட்டித்தீர்த்தும் வருகிறார்கள். ஆனால் அதை மீறியும் பல யூடியூப் சேனல்களுக்கு பேட்டிக்கொடுத்து பல தகவல்களை கொடுத்து வருகிறார் பயில்வான்.

அதற்காக பயில்வான் பல ஆயிரம் சம்பளமாக பெற்று வருகிறார் என்ற தகவல் வெளியானதை அடுத்து நடிகை ஷகீலா அவருக்கு தன்னுடைய சேனலில் பேட்டிக்கொடுக்க எவ்வளவு காசு வாங்கினார் என்ற உண்மையை கூறியிருக்கிறார்.

என் பேட்டியில் 60 சதவீதம் சேகரித்த செய்திகளில் இருந்து 40 சதவீதம் நானே வார்த்தைகளை சேர்த்து பேசுகிறேன் என்று கூறியிருந்தார்.

2000, 3000, 5000 ரூபாய்-ன்னு காசு வாங்கி வாழ்வாதாரத்திற்காக பேசி வருகிறார் என்றும் என் யூடியூப் சேனலில் கொடுத்த பேட்டிக்கு 2000 ஆயிரம் ரூபாய் தான் காசு வாங்கினார் பயில்வான். இதை நான் அந்த உண்மையை கூற எனக்கு ரைட்ஸ் இருக்கு என ஷகீலா தெரிவித்துள்ளார்.