சினேகா பிரசன்னா குடும்பத்தில் ஏற்பட்ட விரிசல்!! பயில்வான் சொன்ன ஷாக்கிங் நியூஸ்
பயில்வான் ரங்கநாதன், சர்ச்சைக்கு பேர் போனவர். அடிக்கடி நடிகை, நடிகர்களின் தனிப்பட்ட விஷயத்தை யூடியூப் பக்கத்தில் பேசி சர்ச்சைகளை உருவாக்கி வருகிறார்.
பல பிரபலங்கள் இவரது பேச்சுக்கு கண்டனம் தெரிவித்தும், பயில்வான் தொடர்ந்து அதையே செய்து வருகிறார்.
இந்நிலையில் தற்போது பயில்வான் ரங்கநாதன் ஒரு வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் அவர், நடிகை சினேகா நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்துகொண்டு பற்றி நமக்கு தெரியும். சமீபத்தில் ஒரு பேட்டி ஒன்றில் சினேகா, எங்கள் குடும்பத்தில் விரிசல் வந்தது உண்மைதான் என கூறியிருந்தார்.
சில நேரங்களில் அடிதடியாக மாறி குடும்பத்தில் விரிசல் பெரிதாகிவிடும். அந்த சமயத்தில் நானும் பிரசன்னாவும் டேட்டிங் சென்றுவிடுவோம். அப்படி செய்யும் எங்களுக்குள் இருக்கும் சண்டையை மறந்துவிடுவோம் என்று சினேகா தெரிவித்து இருந்தார்.
இப்படி கணவன் மனைவிக்கு இடையே சண்டை வந்தால் தயவு செய்து டேட்டிங் செல்லுங்கள், இல்லனா படுக்கை அறைக்கு செல்லுங்கள் இது பல பிரச்சனைகளை தீர்க்கும். இந்த விஷயத்தை சொன்ன சினேகாவுக்கு என்னுடைய பாராட்டுக்கள் என்று பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.