CWC 7 ஷுட்டில் வாட்டர்மெலன் ஸ்டாரை பந்தாடிய மாகாபா, புகழ், கானா வினோத்!! புலம்பும் திவாகர்..
குக் வித் கோமாளி சீசன் 7
விஜய் தொலைக்காட்சியில் மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்து வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று தான் குக் வித் கோமாளி. தற்போது குக் வித் கோமாளி சீசன் 7 கடந்த ஏப்ரல் 4 ஆம் தேதியில் இருந்து ஒளிப்பரப்பாகி வருகிறது. இந்த சீசனில் பிரபலங்கள் தம்பதிகளாக பங்கேற்று போட்டிப்போடுகிறார்கள்.

மனோ-ஜமீலா, அரவிந்த் சேஜு-சங்கீதா, கானா வினோத்-பாக்கியா, ரியாஸ்-நிஷா, நடிகை சம்யுக்தா-அனிருத்தா ஸ்ரீகாந்த், அறந்தாங்கி நிஷா-அவர் கணவர், அரவிந்த் செஜு-சங்கீதா, டிராவிட் செல்வம்-ராஜி போன்றவர்கள் போட்டியாளர்களாக கலந்து கொண்டுள்ளனர்.
புகழ், சுனிதா, ராமர், தங்கதுரை என கோமாளிகளாகவும், செஃப் தாமி, மாதம்பட்டி ரங்கராஜ், கெளசிக் சங்கர் போன்ற நடுவர்களுடன் நடிகை ரோஜாவும் நடுவராக இணைந்துள்ளார்.
இந்நிலையில், இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வெளியிட்டு பிரபலமானவரும் பிக்பாஸ் 9ல் கலந்து கொண்ட போட்டியாளருமான வாட்டர் மெலன் திவாகர் ஒரு வீடியோவை பகிர்ந்து அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

வாட்டர் மெலன் திவாகர்
அதில், ஏப்ரல் 10 ஆம் தேதி குக் வித் கோமாளி ஷூட்டுக்காக வந்தேன். வந்த இடத்தில் கானா வினோத், புகழ், மாகாபா ஆனந்த் மூன்று பேரும் சேர்ந்து என்னை தாக்கினர். அதில் மாகாபா ஆனந்த் குடிபோதையில், என் காதில் அடித்து ரத்த காயமாகிவிட்டது.
இதன் காரணமாக ஈவிபி ஃபிலிம் சிட்டி பக்கத்தில் இருக்கும் போலிஸ் ஸ்டேஷனில் புகாரளித்துள்ளேன் என்று கூறியிருக்கிறார். மேலும் என்னை பற்றி பேசினால் பரவாயில்லை, என் குடும்பத்தை பற்றி அசிங்கமாக பேசினார்கள் என்று தெரிவித்து அதிர்ச்சி கொடுத்துள்ளார் வாட்டர் மெலன் திவாகர்.
கானா வினோத், புகழ், மாகாப ஆனந்த் மீது போலிஸ் கம்ப்ளைன்ட் தந்த வாட்டர் மிலன் ஸ்டார் 😐😑😱 pic.twitter.com/hUVoA0sbZl
— Anshitha🫶💖🍉 (@Anshithaprincey) April 11, 2026