ரெண்டு பாட்டுக்கு எதுக்கு ஆடியோ லான்ச்! பீஸ்ட் டீசருக்கும் ஆப்பு வைத்த நெல்சன்..
மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் விஜய் நடிப்பில் வரும் ஏப்ரல் 13ஆம் தேதி வெளியாகவுள்ளது பீஸ்ட் படம். நெல்சன் இயக்கத்தில் சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் அனிரூத் இசையமைத்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் இரு சிங்கிள் பாடல்களும் பல சாதனைகளை யூடியூப்பில் பெற்று வருகிறது.
படத்தின் எதிர்ப்பார்ப்பு கூடியதை போன்று பாடல் வெளியீடு நிகழ்ச்சிக்காக ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்துக்கொண்டிருந்தனர். ஆனால் விஜய் கூறியதால் நிகழ்ச்சியை நடத்த வேண்டாம் என்று சன்பிக்சர்ஸ் முடிவெடுத்து அறிவிப்பை கொடுத்தார்கள்.
இந்நிலையில் படத்தின் பாடலே இல்லாத போது எதுக்கு ஆடியோ லான்ச் என்று சிலர் கலாய்த்தும் வந்தனர். ஆடியோ லான்ச் தான் இல்லை என்று டீசர், டிரைலருக்கு காத்திருந்த ரசிகர்களுக்கு மற்றுமொரு அதிர்ச்சி செய்தி வெளியாகியுள்ளது.
அதாவது, குறுகிய காலக்கட்டம் இருப்பதால் பீஸ்ட் படத்தின் டிரைலர் மட்டும் ஏப்ரல் முதல் வாரத்தில் வெளியாக படக்குழு முடிவெடுத்து அதன் வேலைகளை மும்முரமாக செயல்பட்டு வருகிறார்கள்.