வெளிநாட்டுக்கு பறந்த தளபதி! விஜய் வாய்க்கு பூட்டு போட இப்படியொரு பிளானா?

vijay sunpictures beast audiolaunch prasanthkishore nobeastaudiolaunch
By Edward Mar 18, 2022 08:30 AM GMT
Report

தமிழ் சினிமாவின் அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்ற கேள்விக்கு இவர்தான் அதற்கு செட்டாகும் என்று பலரால் புகழப்பட்டு வருபவர் நடிகர் விஜய். தளபதி என்று ரசிகர்களால் அழைக்கப்படும் விஜய்யின் எந்த படமோ படத்தின் அறிவிப்போ வந்தாலும் விழாக்கோலம் போல் கொண்டாடுவார்கள். அந்தவகையில் விஜய் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவான பீஸ்ட் படத்தின் பாடல்கள் மிகப்பெரிய சாதனையை பெற்று வருகிறது.

இசை வெளியீட்டு விழா ரத்து :-

இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவை ரசிகர்கள் பெரியளவில் எதிர்ப்பார்த்திருந்தனர். ஆனால் அதற்கு முட்டுக்கட்டை போட்டுள்ளனர் படக்குழு. சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடக்க போவதில்லை என்றும் கொரோனா தொற்றின் 4 வது அலை பரவும் சூழல் இருப்பதால் தான் இதனை நிறுத்தி இருப்பதாக கூறப்படுகிறது.

பிரசாத் கிஷோர் விஜய் சந்திப்பு :-

ஆனால் இதில் ஒரு மறைமுகமான காரணம் ஒன்று கூறப்படுகிறது. கடந்த மாதம் ஹைதராபாத்திற்கு சென்ற விஜய் அங்கு மறைந்த நடிகர் புனித் ராஜ்குமார் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினார். அப்போது அரசியல் ஆலோசகரான பிரசாத் கிஷோரை சந்தித்ததாக செய்திகள் வெளியானது.

அரசியல் சம்பந்தப்பட்ட ஆலோசகரான பிரசாத் கிஷோர் கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக கட்சியின் அரசியல் ஆலோசகராக இருந்து வெற்றியடைய செய்தவர். அப்படியிருக்கையில் விஜய், அவரை சந்திக்க என்ன காரணம் என்று கேள்விகள் எழுந்து வந்தது.

அரசியல் பேசும் விஜய் :-

இசை வெளியீட்டு விழா என்றால் விஜய் அரசியல் பேசுவார். இதுகுறித்து பிரசாத் கிஷோரிடம் எப்படி பேசலாம் என்ற ஆலோசனையை பெற்று இருக்கலாம் என்று கிசுகிசுக்கப்படுகிறது. ஆனால் விஜய் தரப்பில், பிரசத் கிஷோரை தளபதி விஜய் பார்க்கவே இல்லை என்று கூறப்பட்டது.

தளபதி என்ற ஒற்றை வார்த்தை :-

மேலும் விழாவில் ரசிகர்கள், விஜய்யை தளபதி என்று கூறும் போது ஆளும் கட்சிக்கு இடையில் சில மனஸ்தாபங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. இதன் காரணமாக, சன் பிக்சர்ஸ் நிறுவனம் இசை வெளியீட்டு விழாவை நிராகரிக்க முடிவெடுத்துள்ளது.

இதனால் விஜய் ரசிகர்கள் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் மீது கடும் கோபத்தில் இருந்து வருகிறார்கள். தற்போது விஜய் பீஸ்ட் படத்தின் அனைத்து வேலைகளையும் முடித்து விட்டு வெளிநாட்டுக்கு குடும்பத்துடன் சுற்றுலா சென்றுள்ளார் என கூறப்படுகிறது.