மனைவி 43 வயதில் மரணம்!! பிள்ளைகளுக்கு சிங்கிள் Father-ஆக வாழும் நடிகை பரத் கல்யாண்..

Actors Tamil Actors
By Jai Aug 12, 2026 10:30 AM GMT
Report

நடிகர் பரத் கல்யாணின் மனைவி பிரியதர்ஷினி கடந்த 2022ல் தனது 43 வயதில் உயிரிந்தார். உடல் எடையை குறைக்க அவர் எடுத்துக்கொண்ட டயட், சர்க்கரை நோய் தொடர்பான சிக்கல்களுக்கு பின் அவரது உடல்நிலை மோசமாதுதான் மரணத்திற்கு காரணம் என்று கூறப்பட்டது.

மனைவி 43 வயதில் மரணம்!! பிள்ளைகளுக்கு சிங்கிள் Father-ஆக வாழும் நடிகை பரத் கல்யாண்.. | Bharath Kalyan Decisio Children Melting 4 Years

பரத் கல்யாணி

இந்நிலையில் பரத் கல்யாணி அளித்த பேட்டியொன்றில் தன் மனைவி மரணம் குறித்து எமோஷனலாக பேசி உருக வைத்துள்ளார்.

அதில், என் மனைவி 40 நாட்களாக வென்டிலேட்டரில் இருந்தப்பின் 7 மாதங்கள் கோமாவில் இருந்தார். அப்போது தினமும் ஒரு அதிசயம் நடந்துவிடும் என்ற நம்பிக்கையுடன் காத்திருந்தோம். ஆனால் கடவுள் வேறொரு முடிவு எடுத்தார். என் மனைவி இறந்தப்பின் பலரும் நீ இன்னொரு கல்யாணம் செய் என்று அட்வைஸ் கொடுத்தார்கள்.

மனைவி 43 வயதில் மரணம்!! பிள்ளைகளுக்கு சிங்கிள் Father-ஆக வாழும் நடிகை பரத் கல்யாண்.. | Bharath Kalyan Decisio Children Melting 4 Years

வாழ்க்கை அங்கேயே முடிந்துவிடாது, இன்னொரு திருமணம் செய்துகொள் என்று நண்பர்களும், உறவினர்களும் தெரிந்தவர்கள் எல்லோரும் சொன்னார்கள், ஆனால் என் பையனுக்கு இப்போது 23 வயது, மகளுக்கு 18 வயது. அவர்கள் வாழ்க்கையை புரிந்து கொள்ளும் அளவிற்கு வளர்ந்துவிட்டார்கள்.

என்னையும் பார்த்துக்கொள்ள எனக்கு தெரியும். அதனால் எனக்கு இன்னொரு கல்யாணம் தேவையில்லை என்று சொல்லிவிட்டேன். மனைவி இழந்தப்பின் என் குழந்தைகளுக்கு நானே அப்பா, அம்மாவாக இருந்து வளர்த்து வருகிறேன். அவர்களை ஒரு நல்ல முறையில் வாழ்க்கையில் நிலை நிறுத்தவேண்டும் என்பதே என் மிகப்பெரிய நோக்கம் என்று அவர் கூறியிருக்கிறார்.