வெண்பா வாழ்க்கையில் மண்ணை அள்ளிப்போட்ட கண்ணம்மா..தாலிக்கட்டி பொண்டாட்டியாக்கிய ரோஹித்..சுபம்-ஆ?
பிரபல தொலைக்காட்சி சேனலில் பல ஆண்டுகளாக ஒளிப்பரப்பாகி வரும் சீரியல் பாரதி கண்ணம்மா. 2019ல் ஆரம்பிகப்பட்ட இந்த சீரியல் 900 எபிசோட்டை தாண்டி சென்று கொண்டிருக்கிறது.
எப்போது இந்த சீரியலை முடிப்பார் என்றும் ஒரு டிஎன்ஏ எடுக்கும் விசயத்தை ஏன் இப்படி இழுக்கிறீர்கள் என்று நெட்டிசன்கள் பாரதி கண்ணம்மா சீரியலின் இயக்குனரை விளாசியும் வருகிறார்கள். தற்போது ஒரு வழியாக சீரியலை இழுத்து மூட எண்ட் கார்ட் கொடுக்கவுள்ளார்கள் சீரியல் குழு.
வெண்பாவை திருமணம் செய்ய தயாரான பாரதியை தடுத்து நிறுத்தியிருக்கிறார் கண்ணம்மா. மேலும் வெண்பாவை கண்டபடி திட்டி கன்னத்தில் அடித்த எபிசோட் கூட முடிந்துவிட்டது. கல்யாணம் நின்று போய்விடும் மீண்டும் கதையை வேறு ஒரு வழியில் உருட்டுவார் என்று நெட்டிசன்கள் கலாய்த்தும் வந்தனர்.
ஆனால் வெண்பாவை கர்ப்பமாக்கிய ரோஹித்தையே தாலி கட்ட சொல்லியிருக்கிறார் வெண்பாவின் அம்மா.
ஒருவழியாக ரோஹித் தாலிக்கட்ட நாளையோடு சீரியல் முடியவுள்ளது என்றும் கூறப்படுகிறது. ஆனால் இயக்குனரை நம்பி எதையும் வாய்விடக்கூடாது என்றும் கேலி செய்து வருகிறார்கள் நெட்டிசன்கள்.