பாரதியால் கர்ப்பதை ஈடுகட்ட வெண்பா போட்ட பிளான்.. கோவிலில் பளார் விட்டு சரிகட்டிய கண்ணம்மா..

Bharathi Kannamma Vijay Television Serials
By Jai Nov 01, 2022 09:15 AM GMT
Report

தொலைக்காட்சி சேனலில் பல சீரியல்கள் ரசிகர்களை ஈர்த்து வருவதைவிட வெறுப்பை ஏற்றும் சீரியல்களாக மாறி வருகிறது. அப்படி எந்தவொரு லாஜிக்கும் இல்லாமல் இயக்குனர்கள் சீரியல்களை எடுத்து வருகிறார்.

பாரதி - வெண்பா திருமணம்

அந்த லிஸ்ட்டில் பாரதி கண்ணம்மா சீரியலும் அடங்கும். நல்லவள் போல் ரோஹித்தை திருமணம் செய்ய ஒற்றுக்கொள்ளும் வெண்பா கடைசி நேரத்தில் பாரதி தாலிக்கட்ட காத்துக்கொண்டிருக்கிறார். இடையில் டிஎன்ஏ டெஸ்ட்க்காக பாரதி காத்திருக்கிறார். இதற்கு பிளான் போட்ட வெண்பாவின் திட்டத்தை அறிந்து திருமண மண்டபத்திலேயே சாந்தி கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டுகிறார் கண்ணம்மா.

பாரதி ஐயாவை தான் வெண்பா கல்யாணம் செய்யவுள்ளார் என்ற உண்மையை கூறிய சாந்தியால் மண்டம் உட்பட அனைவரும் ஷாக்காகியுள்ளனர். கோயிலுக்கு ரோஹித்துடன் கண்ணம்மா உள்ளிட்டவர்கள் செல்ல பாரதியும் டி என் ஏ டெஸ்ட் ரிப்போர்ட் வர இரு நாட்கள் ஆகும் என்பதால் கோவிலுக்கு வருகிறார். ஆனால் மனமாறி வேண்டாம் என்று கோவிலில் இருந்து காரில் ஏற கிளம்பும் போது வெண்பா பார்த்தி விடுகிறார்.

பாரதியால் கர்ப்பதை ஈடுகட்ட வெண்பா போட்ட பிளான்.. கோவிலில் பளார் விட்டு சரிகட்டிய கண்ணம்மா.. | Bharathi Venba Marriage Kannamma Slap In Temple

பளார் விட்ட கண்ணம்மா

உடனே மாலையும் கழுத்துமாக தாலிக்கட்ட காத்திருக்கிறார் பாரதி. குடும்பத்தினர்கள் அனைவரும் கோவிலில் வர கண்ணம்மா உடனே வந்து வெண்பாவை பளார் பளார் என கன்னத்தில் அடித்துள்ளார். பின் பாரதியை கண்டபடி பேசியுள்ளார். தாலி கட்டிவிட்டு உன்னால் வெளியே வரமுடியுமா. விவாகரத்து செய்யாமல் இவளை கல்யாணம் செய்து கம்பி எண்ணனுமா என்று பதிலடி கொடுக்கும் விதமாக கண்ணம்மா பேசியுள்ளார்.

மேலும் பாரதியை அம்மா, அப்பா, தம்பி என்று கடுமையாக அவமானப்படுத்தியிருக்கிறார்கள். எப்படியாவது கதையை மாற்றி வேறு கோணத்தில் செலுத்துவார் என்று நெட்டிசன்கள் கூறுவதுபோல் இயக்குனர் இன்னும் கதையை இழுத்து செல்வதையும் கலாய்த்து வருகிறார்கள்.

GalleryGallery