மனோஜ் பிறந்த நேரம்..பாரதிராஜாவுக்கு அடித்த அதிர்ஷ்டம்!! வெளியான தகவல்..

Manoj Bharathiraja Bharathiraja Tamil Directors
By Edward Mar 27, 2025 02:30 AM GMT
Report

பாரதிராஜாவின் மகன் மனோஜ்

தமிழ் சினிமாவின் இயக்குநர் இமயம் என்று அனைவராலும் புகழப்பட்டு வரும் இயக்குநர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் நேற்றிரவு மாரடைப்பு காரணமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

தந்தை பாரதிராஜா இயக்கத்தில் தாஜ்மஹால் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகினார் மனோஜ். இதன்பின் ஒருசில படங்களில் நடித்து வந்த மனோஜ், சில காரணங்களால் சினிமாவில் இருந்து விலகினார்.

மனோஜ் பிறந்த நேரம்..பாரதிராஜாவுக்கு அடித்த அதிர்ஷ்டம்!! வெளியான தகவல்.. | Bharathiraja 1St Film Opportunity When Manoj Born

அதன்பின் ஈஸ்வரன், மாநாடு உள்ளிட்ட படங்களில் நடித்து ரீஎண்ட்ரி கொடுத்தார். மனோஜ் கடைசியாக மார்கழி திங்கள் என்ற படத்தினை இயக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. மார்ச் 25 ஆம் தேதி இரவு மாரடைப்பால் மனோஜ் உயிரிழந்த சம்பவத்தை அறிந்த தென்னிந்திய சினிமாவை சேர்ந்த பிரபலங்கள் நீலாங்கரை பகுதியில் இருக்கும் அவர் வீட்டிற்கு சென்று இறுதி அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

மனோஜ் பிறந்த நேரம்..பாரதிராஜாவுக்கு அடித்த அதிர்ஷ்டம்!! வெளியான தகவல்.. | Bharathiraja 1St Film Opportunity When Manoj Born

அடித்த அதிர்ஷ்டம்

இந்நிலையில், ஆரம்பக்கட்டத்தில் பாரதிராஜா, 1976ல் சினிமாவில் அறிமுகமாகவில்லை. அப்போது வாய்ப்புத் தேடிக்கொண்டிருக்கும் போது தான் மனோஜ், பாரதிராஜாவின் சொந்த ஊரில் பிறந்திருக்கிறார். இச்செய்தி பாரதிராஜாவுக்கு தெரியவந்துள்ளது. அப்படிப்பட்ட நேரத்தில் தான் 16 வயதினிலே படத்தை தயாரித்த தயாரிப்பாளர் ராஜ்கண்ணன், பாரதிராஜாபை சந்திக்க வந்துள்ளார்.

அப்போது நான் பணம் ரெடி செய்துவிட்டேன், படத்தை ஆரம்பிக்கலாம் என்று சொல்லியுள்ளார். பாரதிராஜா தனக்கு மகன் பிறந்த விஷயத்தை கூறியதும் அங்கிருந்தவர்கள் சந்தோஷமடைந்தனர். பின் மகனை பார்க்க ஊருக்கு செல்ல பணம் கிடைக்காமல் கஷ்டப்பட்டுள்ளார்.

மனோஜ் பிறந்த நேரம்..பாரதிராஜாவுக்கு அடித்த அதிர்ஷ்டம்!! வெளியான தகவல்.. | Bharathiraja 1St Film Opportunity When Manoj Born

அப்போது பாரதிராஜாவின் நண்பர் ஆறுமுகம் என்பவர் தன் மனைவியின் வளையலை அடகுவைத்து பணத்தை கொடுத்து அனுப்பியிருக்கிறார். அதிலிருந்து மகன் மனோஜ் பிறந்த நேரத்தில் தான் தன் முதல் படவாய்ப்பு கிடைத்தது, அதனால் மகன் தான் தன்னுடைய அதிர்ஷ்டம் என்று பாரதிராஜா நினைப்பாராம். அப்படியொரு நிலையை உருவாக்கித்தந்த மகனை இழந்து மிகப்பெரிய அதிர்ச்சியில் இருக்கிறார் இயக்குநர் இமயம் பாரதிராஜா.