இனிமே உன்ன வச்சு படமே எடுக்க மாட்டேன்யா, அத்தனை பேர் முன்பும் கமலிடம் சண்டைப்போட்ட பாரதிராஜா
Kamal Haasan
Bharathiraja
By Tony
பாரதிராஜா தமிழ் சினிமாவை முதன் முதலாக செட்டிற்குள் இருந்து ரியல் லொக்கேஷனுக்கு கொண்டு வந்தவர். இவர் தான் ஆரம்பத்தில் ரஜினி, கமலை வைத்து 16 வயதினிலே என்ற மெகா ஹிட் படத்தை கொடுத்தார்.
அதை தொடர்ந்து கமலுடன் சிவப்பு ரோஜாக்கள், கைதியின் டைரி ஆகிய படங்களில் பணியாற்றினார்.
இதில் கைதியின் டைரி படத்தின் கிளைமேக் எடுக்கும் போது கமலுக்கு ஏதோ பாரதிராஜ மேல் கோபமாம்.
படப்பிடிப்பிற்கு வராமல் இருக்க, பாராதிராஜா கமலை அழைத்து வாருங்கள் கிளைமேக்ஸ் எடுக்க வேண்டும் என்றாராம்.
உடனே கமல் வர, கிளைமேக்ஸ் காட்சியை எடுத்து முடித்த பாராதிராஜா, இது தான் உன்னை நான் இயக்கிய கடைசி ஷாட் என்று சொல்லி விட்டு கோபமாக சென்றதாக சமீபத்தில் ஒரு பேட்டியில் பாராதிராஜா கூறியுள்ளார்.