மேடையில் எல்லைமீறிய பாரதிராஜா, பார்த்திபன்! இயக்குனரை பெண்ணை வைத்து இப்படியா பேசுறது

Krithi Shetty R. Parthiban Bharathiraja
By Edward Jul 08, 2022 07:42 AM GMT
Report

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக திகழ்ந்து வருபவர் இயக்குனர் லிங்குசாமி. ஆனந்தம் படத்தின் மூலம் இயக்குனர் அவதாரம் எடுத்த லிங்குசாமி முதல் படமே சூப்பர் ஹிட் கொடுத்து பிரபலமானார். இதையடுத்து ரன், ஜி, சண்டக்கோழி, பையா, வேட்டை போன்ற படங்களை கொண்டு மிகப்பெரிய ஹிட் ஜொடுத்தார்.

அதனையடுத்து அவர் இயக்கிய அஞ்சான், சண்டக்கோழி 2 போன்ற படங்கள் படுதோல்வியை தழுவியது. இதனையடுத்து சுமார் 10 வருடங்கள் எந்தவொரு வெற்றியையும் கொடுக்காத லிங்குசாமி தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனி, ஆதிம் கிரித்தி செட்டி போன்றவர்கள் நடிப்பில் தி வாரியர் என்ற படத்தினை இயக்கியுள்ளார்.

இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி சமீபத்தில் சத்யம் தியேட்டரில் நடைபெற்றது. பல முன்னணி நட்சத்திரங்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் பாரதிராஜா, மணிரத்னம், சங்கர், பார்த்திபன், எஸ் ஜே சூர்யா, சிவா உள்ளிட்ட ஜாம்பவான் இயக்குனர்கள் மற்றும் நதியா, விஷால், ஆர்யா, சிவகார்த்திகேயன், டிஎஸ்பி, கலந்து கொண்டு பேசியிருந்தனர்.

அப்போது இயக்குனர் பாரதிராஜா மேடையில் பேசுகையில், என்னுடைய லவ்வபுல் பாய். அவன் பொண்ணாக இருந்தா கூடவே வைத்திருப்பேன் , அன்பால் என்னௌ குளிப்பாட்டிட்டான் என்று கூறியுள்ளார்.

இதையடுத்து பேசிய இயக்குனர் பார்த்திபன், லிங்குசாமியை ஒரு பொண்ணாக இருந்திருந்தால் எத்தை ஆண்களை மடக்கி இருப்பார் என்று தான் நினைக்க தோன்றுகிறது. இப்படி ஒரு இயக்குனரை மேடையில் பெண்ணாக ஒப்பிட்டு பேசி முகம் சுளிக்க வைத்துள்ளது.