நடிகை நந்தனாவுடன் காதல் வலையில் மகன்!! பிடிக்காமல் பாரதிராஜா செய்த வேலை...
இயக்குனர் இமயம் பாரதிராஜா மகனாக தாஜ்மஹால் படத்தின் மூலம் கதாநாயனாக அறிமுகமாகினார் நடிகர் மனோஜ் பாரதிராஜா. அப்பாவின் இயக்கத்தில் முதல் படமே மிகப்பெரிய ஹிட் கொடுத்த மனோஜ் சமுத்திரம், கடல் பூக்கள், பல்லவன், வருஷமெல்லாம் வசந்தம் உள்ளிட்ட பல படங்களில் நடித்து வந்தார்.
ஆனால் சரியான படம் அமையாததால் சினிமா வாய்ப்புகள் குறைந்தனர். அப்படி 2005ல் வெளியான சாதுரியம் என்ற படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்த நடிகை நந்தனாவை காதலித்தார். பின் 2006ல் நந்தனாவை திருமணம் செய்து கொண்டார்.
நந்தனா மீது காதல்
சமீபத்தில் நடிகர் மனோஜ் அளித்த பேட்டியொன்றில் நந்தனா மீது காதல் உருவானது குறித்து பகிர்ந்துள்ளார். சாதுரியன் படத்தின் ஷூட்டிங்கின் போது, ஹீரோயின் இவர்கள் தான் என்று அறிமுகம் செய்து விட்டார். நந்தனாவை அப்போது முதன்முதலில் பார்த்த போது ஒரு ஸ்பார்ட், காதல் வந்தது. ஒரு காட்சியில் அவர் தோல்பட்டையை பிடிக்க வேண்டும்.
ஆனால் என்னால் பிடிக்க முடியாமல் 4 டேக் எடுத்தேன். அப்போது பாண்டிச்சேரியில் பாடல் காட்சி முடிந்து பேக்கப் செய்ய வேண்டும். அன்று ஷூட் முடிந்து அவர் கண்ணில் இருந்து கண்ணீர் வந்தது. அப்போது தான் எனக்கு தெரிந்தது அவர் காதலிப்பது. மெசேஜ் செய்து பேச ஆரம்பித்தேன். ஒருநாள், உனக்கு அறிவில்லையா, போன் பண்ணன்னும் என்று தோண்றியதா என்று கேட்டாங்க நந்தனா. அதன்பின் தான் நன் ஓப்பனாக காதல் சொன்னேன்.
பாரதிராஜா செய்த வேலை
உடனே நந்தனா அம்மா, அப்பாவிடம் கூற சண்டை ஏற்பட்டது. என் நண்பர் மகேஷ் தான் என் அப்பாவிடம் நந்தனா குடும்பத்தை பற்றி கூறினான். அந்த பெண்ணை (நந்தனா) பிடிக்கவில்லை என்று என் அப்பா, என் வீட்டாரிடம் கூறி நந்தனா விட்டிற்கு அனுப்பி வைத்தார்.
அதன்பின், பேசியப்பின் அனைவரும் பிரம்மித்து போனார்கள். ஏன் என்றால் ஆர்மி, பெரிய பெரிய இடத்தில் இருப்பவர்கள் தான். இதை என் பெரியப்பா, அப்பாவிற்கு கால் செய்து ”உன் பையனுக்கு அந்த பொண்ணை விட்டால் வேறு யாரும் கிடைக்கமாட்டால் உடனே கல்யாணம் பண்ணி வைத்துவிடு” என்று கூறிவிட்டார்.
அதன்பின் தான் அவரே சென்று ஓகே சொல்லி கல்யாணத்தை செய்து வைத்தார். நந்தனா மட்டும் இல்லை என்றால் எப்போதோ உடைந்து போய் இருப்பேன். நான் எப்போது விழுகிறேனோ அவர் என்னை பாதுகாத்தாள். அதன்பின் என் குழந்தைகள் இருவரும் தான் என்று எமோஷ்னலாக பேசியிருக்கிறார் நடிகர் மனோஜ்.