5 வருடமாக நாசமாகிய சினிமா வாழ்க்கை! 5 வருட மெளனத்தை உடைத்த பாவனா..

தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக இருந்தவர் நடிகை பாவனா. கடந்த 2017ல் மர்மநபர்களால் காரில் கடத்தப்பட்டு சீரழித்த செய்தி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த கடத்தலில் நடிகர் திலீப்பிற்கு தொடர்பு இருந்ததாக கூறி கைது செய்யப்பட்டார்.

தற்போது கைது செய்த போலிசாரின் கையை வெட்டு பிளான் செய்துள்ளார் திலீப் என்று மீண்டும் ஒரு வழக்கிட்டு கைது செய்தனர். இந்நிலையில் 5 வருடங்களாக எதுவும் பேசாமல் அமைதியாக இருந்த நடிகை பாவனா அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

பாதித்தவளாக இருந்து தப்பி மீண்ட பயணம் என் அடையாளத்தையும் பெயரையும் 5 ஆண்டுகளாக நசுக்கியது. என்னை அவமானப்படுத்த பல்வேறு முயற்சிகள் நடந்தது. அதிலிருந்து நான் மீண்டுவர சிலர் உதவியாக இருந்தார்கள்.

நீதியை நிலைநாட்டவும், தப்பு செய்தவர்கள் தண்டிக்கப்படவும், இனி யாரும் இதுபோன்ற செயல்களில் ஈடுபடாமல் இருக்கவும் நான் இந்தப் பயணத்தைத் தொடர்கிறேன். என்னுடன் உறுதுணையாக இருக்கும் அனைவருக்கும் இதயபூர்வமான நன்றி என குறிப்பிட்டுள்ளார்.

உலகின் அனைத்துப் பாகங்களிலும் இடம் பெறும் வெளிநாட்டு - உள்நாட்டு அரசியல், சினிமா மற்றும் பொருளாதாரத்தை உடனுக்குடன் அறிந்து கொள்ள லங்காசிறிக் குழுமத்துடன் இணைந்திருங்கள்