மலையாளம் பேசியதால் வெளியேற்றப்பட்ட ஷெரினா!! 28 நாளில் அவரது சம்பளம் இத்தனை லட்சமா
ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் கடந்த 5 ஆண்டுகளாக மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வரும் நிகழ்ச்சி பிக்பாஸ். உலகநாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்கு இந்நிகழ்ச்சியின் 6வது சீசன் அக்டோபர் 9 ஆம் தேதி துவங்கப்பட்டது.
எலிமினேட்
பெரியளவில் பிரபலங்கள் இல்லாமல் தொலைக்காட்சி பிரபலங்கள் 21 பேரை வீட்டிற்குள் அனுப்பப்பட்டுள்ளனர். 30 நாட்களை கடந்துள்ள பிக்பாஸ் சீசன் 6ல் ஜிபி முத்து தானாகவே வெளியேறியதை அடுத்து சாந்தி மாஸ்டர், அசல் கோளாறு எலிமினேட் செய்து அனுப்பட்டனர்.
கடந்த வாரம் கமல் ஹாசனால் ஷெரினா வெளியேற்றப்பட்டார். பல முறை பிக்பாஸ் கண்டித்தும் அதைமீறி ஆயிஷாவுடன் மலையாள மொழியில் பேசி சர்ச்சையில் சிக்கினார். அந்த ஒரு காரணத்திற்காக கமல் ஹாசனையே கோப்படுத்தியது. நானே ரெட் கார்ட் கொடுத்து வெளியேற்ற முடியும் என்று அவர் கூறியதற்கு இந்த விசயமும் ஒரு காரணமாக அமைந்தது.
ஷெரினா வாங்கிய சம்பளம்
இதனை தொடர்ந்து ஷெரினா எலிமினேட் செய்யப்பட்டு வீட்டுக்கு அனுப்பட்டார். இந்நிலையில் 28 நாட்கள் பிக்பாஸ் வீட்டில் இருந்த ஷெரினா வாங்கிய சம்பள விவரம் வெளியாகியுள்ளது. ஒரு நாளைக்கு ஷெரினாவிற்கு 23 முதல் 25 ஆயிரம் சம்பளமாக பேசப்பட்டதாம்.
அப்படி 23 ஆயிரம் சம்பளம் என்று கணக்கிட்டால் அவரது 28 நாள் சம்பளமாக 6,44,000 லட்சம் பெற்றுள்ளார் என்று கூறப்படுகிறது. ஷெரினா ஒரு நடிகையாகவும் இருப்பதால் ஒரு நாளைக்கு 25 ஆயிரம் சம்பளாக பெற்றிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
#Sherina evicted with Malayalam card....#BiggBossTamil6 pic.twitter.com/cWUyXwG7UK
— Dr.Ilavarasi (@Ilavarisirk) November 6, 2022