பிக் பாஸ் 9 எப்போது தொடங்குகிறது தெரியுமா.. விஜய் டிவி வெளியிட்ட அதிரடி அறிவிப்பு
கமல் ஹாசன் தொகுத்து வழங்க ஏழு சீசன்கள் நடைபெற்று வந்தன. ஆனால், கடந்த பிக் பாஸ் 8வது சீசனில் இருந்து கமல் வெளியேறியதனால், அவருக்கு பதிலாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுப்பாளராக களமிறங்கினார்.
இவர் நிகழ்ச்சியை கையாளும் விதம் மக்களை கவர்ந்த நிலையில், நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனால் பிக் பாஸ் 9வது சீசனையும் விஜய் சேதுபதிதான் தொகுத்து வழங்குகிறார். சமீபத்தில் இதற்கான ப்ரோமோ வீடியோ வெளிவந்திருந்தது.
ஆனால், பிக் பாஸ் 9 எப்போது ஆரம்பம் என்பது குறித்து விஜய் டிவி தரப்பில் இருந்து எந்த ஒரு அறிவிப்பும் இதுவரை வெளிவராமல் இருந்த நிலையில், தற்போது அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்த அறிவிப்பில் வருகிற அக்டோபர் 5ம் தேதி பிக் பாஸ் 9 துவங்குகிறது என தெரிவித்துள்ளனர். பிக் பாஸ் 9 நிகழ்ச்சியை எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்களுக்கு இது மகிழ்ச்சியான செய்தியாக அமைந்துள்ளது.