விஜய் பற்றி அப்படி பேசிட்டு அந்தர் பல்டி அடித்த பிக்பாஸ் பிரபலம்.. கலாய்க்கும் ரசிகர்கள்..
தமிழகம் முழுவதும் தற்போது பதற்றமாக பார்த்து வரும் ஊர் என்றால் அது கள்ளக்குறிச்சி தான். விஷச் சாராய குடித்தவர்களின் மரணங்கள் தொடர்பாக பல அரசியல் தலைவர்கள் பிரபலங்கள் நேரில் சென்று பார்த்து வரும் நிலையில் இன்று ஜூன் 21 ஆம் தேதி நிலவரப்படி 49 பேர் உயிரழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாடு அரசு ரூபாய் 10 லட்சமாக விஷச்சாராயம் குடித்து உயிரிழந்த குடும்பத்திற்கு நிவாரணமாக வழங்கியுள்ளது.
இதுதொடர்பாக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் கள்ளக்குறிச்சிக்கு நேற்றிரவு சென்று மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களை நலம் விசாரித்திருந்தார். விஜய் சந்தித்து நலம் விசாரித்த விஷயம் இணையத்தில் வீடியோவாக வைரலாகியது.
மக்களை சந்தித்த விஜய் நிகழ்வையொட்டிய செய்தி ஒன்றில், செய்தி வாசிப்பாளரும் சின்னத்திரை நடிகையுமான அனிதா சம்பத் கடுமையாக விமர்சித்து இருக்கிறார் என்ற கமெண்ட் செய்திருக்கிறார்.
"நாட்டுக்காக போராட போனபோது தீவிரவாதிகளை நேருக்கு நேர் தாக்கும்போது நெஞ்சில் குண்டுபட்டு மருத்துவமனையில் கவலைக்கிடமா இருக்காங்க பாவம்" என்ற பதிவினை பகிர்ந்திருந்தார். இதனை பார்த்த விஜய் ரசிகர்கள், அனிதா சம்பத்தை படுமோசமான கலாய்த்து கருத்துக்களை பகிர்ந்து வந்தனர். இதை பலர் தவறாக புரிந்து கொண்டார்கள் என்று புது விளக்கம் ஒன்றினை கொடுத்திருக்கிறார் அனிதா சம்பத்.
"என்னோட கமெண்ட்ல விஜய் பத்தி இல்லவே இல்லை, அவரை நான் எங்கயும் தவறாக குறிப்பிடவே இல்லை, விஜய்யின் அரசியல் வருகை குறித்து நான் மிகவும் சந்தோஷப்படுகிறேன்" என்று ஆரம்பித்து விளக்கத்தை கொடுத்திருக்கிறார்.