நயன்தாரா மாதிரி இருக்காரா மைனா!! பிக்பாஸ் போட்டியாளர்களை பங்கம் செய்த விஜே பார்வதி..

Bigg Boss Myna Nandhini
By Edward Jan 10, 2023 07:45 AM GMT
Report

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தற்போது நிறைவு பகுதியை எட்டியுள்ளது. கமல் ஹாசன் அவர்களால் தொகுத்து வழங்கப்பட்டு வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில், கடந்த வாரம் எதிர்பார்க்காத வகையில் ரச்சிதா மகாலட்சுமி வீட்டினை விட்டு வெளியேற்றப்பட்டார்.

91 நாட்கள் இருந்த ரச்சிதா வெளியேறியது பிக்பாஸ் சீசன் 6ன் முதல் இறுதி போட்டியாளராக அமுதவாணன் தேர்வு செய்யப்பட்டார்.

இந்நிலையில், நிகழ்ச்சியை சுவாரஷ்யமாக கொண்டு செல்ல இணையத்தளத்தில் விஜே-வாக பணியாற்றி வரும் விஜே பார்வதி மற்றும் விஜே ஷோபனா சிறப்பு விருந்தினராக சென்றுள்ளனர்.

அப்போது மைனாவிடம் பார்வதி நீங்கள் வீட்டில் என்ன செய்கிறீர்கள். உங்கள் காமெடிகளுக்கு மற்றவர்கள் சிரிக்கிறார்கள் என்று நினைக்கிறீர்களா என்றும் நான் பாட்டுக்கு இருக்கிறேன் டைட்டில் வின் பண்ணணும் என்கிற எண்ணம் இல்லையா என்று கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார்.

மேலும் மைனா நயன் தாரா மாதிரி இருக்கார் தானே என்று ஷோபனாவும் தன் பங்கிற்கு மைனா நந்தினியை கலாய்த்துள்ளனர்.