பிரபல தொலைக்காட்சிக்கு டாட்டா காமித்த நடிகர்! பிக்பாஸ் 5ல் இந்த வயதான அண்ணாச்சியா?

biggboss kamalhaasan biggbosstamil5 immanannachi
By Edward Sep 13, 2021 02:12 PM GMT
Report

பிரபல தொலைக்காட்சியில் கடந்த 4 ஆண்டுகளாக ஒளிப்பரப்பாகி வரும் நிகழ்ச்சி பிக்பாஸ். 4 சீசனையும் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். தற்போது பிக்பாஸ் 5 நிகழ்ச்சி அக்டோபர் மாதம் துவங்க இருக்கும் நிலையில் பிக்பாஸ் 5ன் லோகோ வீடியோவும், முதல் பிரமோ வீடியோவும் வெளியாகி டிரெண்ட்டிங்கில் நம்பர் 1 இடத்தினை பிடித்தது.

போட்டியாளர்கள் யார் யார் என்பது க்ளூவுடன் பலர் செய்திகளாக வெளியிட்டு வரும் நிலையில், நடிகை ஷகிலாவின் மகள் மிளா, மிஸ் டிராண்ட் இந்தியா நமீதா, சந்தோஷ் பிரதாப், பிரதைனி சர்வா, கோபிநாத் ரவி, பவானி ரெட்டி, சூசன் உள்ளிட்ட பலரின் பெயர் கூறப்பட்டு வந்தது.

இந்நிலையில் சன் தொலைக்காட்சியில் காமெடி நிகழ்ச்சிகளையும் தொகுத்தும் பல படங்களில் காமெடி நடிகராக நடித்து பிரபலமானவர் இமான் அண்ணாச்சி. தற்போது பிக்பாஸ் குழு போட்டியாளராக கலந்து கொள்ள இம்மான் அண்ணாச்சியிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் செய்திகள் பரவி வருகிறது.

Gallery