பிக்பாஸ் நடிகை அபிராமியின் காதலர் இவரா!! அவரே வெளியிட்ட புகைப்படம்...

Bigg Boss Tamil Actress Actress Abhirami Venkatachalam
By Edward Apr 15, 2026 07:30 AM GMT
Report

அபிராமி வெங்கடாசலம்

2018ல் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான நோட்டா படத்தில் சித்ரா வினோதன் என்ற ரோலில் நடித்து பிரபலமானவர் தான் மாடல் நடிகை அபிராமி வெங்கடாசலம். இப்படத்தினை தொடர்ந்து, நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்தார்.

பிக்பாஸ் நடிகை அபிராமியின் காதலர் இவரா!! அவரே வெளியிட்ட புகைப்படம்... | Biggboss Actress Abhirami Introduces Her Boyfriend

அதன்பின் பிக்பாஸ் சீசன் 3ல் போட்டியாளராக கலந்துகொண்டு 56 நாட்களுக்கு பின் எவிக்டாகி வெளியேறினார். பின் அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்த அபிராமி பிக்பாஸ் அல்டிமேட் சீசன் 1 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு 5வது ரன்னர் அப் இடத்தினை பிடித்தார்.

அதன்பின் வெப் தொடர்களில் நடித்தும் வரும் அபிராமி, அனந்தா, DVK உள்ளிட்ட படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் அபிராமி, இன்ஸ்டாகிராமில் தன்னுடைய காதலரை அறிமுகம் செய்துள்ளார்.

பிக்பாஸ் நடிகை அபிராமியின் காதலர் இவரா!! அவரே வெளியிட்ட புகைப்படம்... | Biggboss Actress Abhirami Introduces Her Boyfriend

காதலர்

தன்னுடைய காதலரை பார்த்தபடி எடுத்த புகைப்படத்துடன், உன் கண்கள் என்னை பார்த்தாலே, வார்த்தைகள் தேவையில்லை, ஆயிரம் காதல் கடிதங்கள் எழுதப்பட்டு கொண்டே இருக்கிறது போல எனக்கு உணர்கிறேன் என்ற கேப்ஷனுடன் ஒரு பதிவினை பகிர்ந்துள்ளார். இதற்கு அவரது ரசிகர்கள் வாழ்த்துக்கள் கூறி வருகிறார்கள்.