60 வயதானவருடன் ரொமான்ஸ்!! கணவரை பிரிந்த பின் ரச்சிதா வெளியிட்ட வீடியோ..
சின்னத்திரை சீரியல் நடிகையாக கன்னட மொழியில் அறிமுகமாகி தமிழில் பிரிவோம் சந்திப்போம் என்ற சீரியல் நடித்து பிரபலமானார் நடிகை ரச்சிதா மகாலட்சுமி. இதன்பின் சரவணன் மீனாட்சி சீரியலில் முக்கிய ரோலில் நடித்து வந்த ரச்சிதா, நடிகர் தினேஷை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
திருமணமாகி 8 ஆண்டுகளில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வந்தனர். அதன்பின் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் வெளியில் வந்த ரச்சிதா, தினேஷ் மீது புகாரளித்து பிரச்சனை செய்தார். அதன்பின் தினேஷ் பிக்பாஸ் நிகழ்ச்சி செல்ல இருவர் சம்மந்தமாக விசயங்கள் பேசு பொருளாக மாறியது. தன் கணவருடன் சேருவது என்பது நடக்காத ஒன்று என்று கூறும் அளவிற்கு ரச்சிதாவின் போக்கு சென்று கொண்டிருக்கிறது.
அதன்பின் தன் வேலையில் பிஸியாக இருந்து வரும் ரச்சிதா, இணையத்தில் ஆக்டிவாக இருந்து புகைப்படங்களையும் தனிமை பற்றிய விசயங்களையும் பகிர்ந்து வந்தார். தற்போது கன்னட படத்தில் நடித்துள்ள ரச்சிதா, அதன்பின் கிளாமர் ஆடையணிந்து ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தும் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
கன்னட படத்தில் நடித்துள்ள ரச்சிதா மகாலட்சுமி, 60 வயதை எட்டிய நடிகர் ஜக்கேஷ் என்பவருன் கதாநாயகியாக நடித்துள்ளார். அப்படத்தில் 60 வயதான பாரளுமன்ற எம்பி-ஆக நடிக்கும் ஜக்கேஷ் உடன் நடித்துள்ள அப்படம் இன்று வெளியாகியுள்ளது. அப்படத்தின் போஸ்டர் தியேட்டர்களில் அடித்துள்ள பேனர்களின் புகைப்படத்தை, ரச்சிதா இணையத்தில் பகிர்ந்திருக்கிறார்.
இது தற்போது ரசிகர்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. மெய் நிகரே, ஃபயர் உட்பட 3 போன்ற படங்களில் நடித்து வரும் ரச்சிதா, ஏற்கனவே முதல் கணவர் தினேஷை பிரிந்ததே பல விமர்சனங்கள் அவர் மீது இணையத்தில் கருத்துக்களாக பகிரப்பட்டு வருகிறது.
You May Like this Video

