வாய்ப்புக்காக அப்படி..பிளாஸ்டிக் சர்ஜரி செஞ்சேனா!! முற்றுப்புள்ளி வைத்த பிக்பாஸ் ஷிவானி..
ஷிவானி நாராயணன்
சின்னத்திரையில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் ஷிவானி நாராயணன். இவர் விஜய் டிவி சீரியல்களில் நடிக்க துவங்கி, பின் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானார். மேலும் இவருடைய போட்டோஷூட் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் அவ்வப்போது வைரலாகும்.
ஆனால் சமீபகாலமாக அவர் இணையத்தில் ஆக்டிவாக இல்லாமல் காணாமல் போனார். தற்போது மீண்டும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் ஆக்டிவாக இருந்து கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
பிளாஸ்டிக் சர்ஜரி
சமீபத்தில் அவர் அளித்த பேட்டியொன்றில், ஷிவானி இடையில் காணாமல் போய்விட்டாரே என்ற கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார். அதில், என்னுடைய தனிப்பட்ட காரணத்திற்காக பிரேக் எடுத்திருந்தேன். தொழில் ரீதியாகவும், உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் பிரேக் எடுத்தேன். படிப்பிலும் கொஞ்சம் கவனம் செலுத்தினேன். அதற்காக லண்டனுக்கு செல்லவும் திட்டமிட்டு இருந்தேன்.
ஆனால், என்னுடைய தாத்தா, பாட்டி இறந்துவிட்டார்கள். அதனால் லண்டன் போகமுடியவில்லை. நான் மூக்கில் சர்ஜரி செய்தேன் என்று சமீபகாலமாக கூறுவதை அறிந்தேன். நான் அதை செய்யவில்லை. எதுவும் நான் செய்யவும் இல்லை. அதை செய்ய மில்லியனுக்கும் மேலாகும். எல்லோரும் சென்று பண்ணமுடியாது.
மாற்றத்திற்கு என்னுடைய டயட் காரணமாக இருக்கலாம், அப்படியெல்லாம் கூறுவதற்கும் இது காரணமாக தோன்றலாம். மேலும் பேசிய ஷிவானி, வாய்ப்புக்காக கிளாமர் காட்டுகிறாரா என்ற கேள்வி எழுந்து வருவது குறித்தும் பகிர்ந்துள்ளார்.
அப்படி செய்தால் வாய்ப்பு கிடைத்துவிடுமா என்ன? எனக்கு தெரியவில்லை. பிக்பாஸுக்கு பின் நான் வேலையில் அதிகமாக ஈடுபட்டு இருந்தேன் என்று ஷிவானி தெரிவித்துள்ளார்.