ஹலோ டிசம்பர்!! பிக்பாஸ் 3 லாஸ்லியாவின் க்யூட் புகைப்படங்கள்..

Bigg Boss Losliya Mariyanesan Tamil Actress Actress
By Edward Dec 03, 2024 05:15 PM GMT
Report

பிக்பாஸ் 3 லாஸ்லியா

இலங்கையை சேர்ந்த தமிழ் பெண் லாஸ்லியா. அங்கு ஒரு தமிழ் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக வேலை செய்து வந்தார். அதன் பின்னர் உலக நாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தமிழ் மக்கள் மத்தியில் பிரபலமானார்.

அதன் மூலம் பட வாய்ப்புகளும் கிடைத்தது. 2020 ஆம் ஆண்டு ஹர்பஜன் சிங் மற்றும் அர்ஜுன் இணைந்து நடித்த பிரண்ட்ஷிப் திரைப்படத்தில் முக்கிய ரோலில் நடித்திருந்தார். இப்படத்தை தொடர்ந்து மலையாளத்தில் வெளியான ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் திரைப்படத்தின் தழுவலான கூகுள் குட்டப்பா படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார்.

ஹலோ டிசம்பர்!! பிக்பாஸ் 3 லாஸ்லியாவின் க்யூட் புகைப்படங்கள்.. | Biggboss3 Actress Losliya Mariyanesan Photo Post

புகைப்படங்கள்

இந்த படமும் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை. சோசியல் மீடியாவில் ஆக்ட்டிவாக இருந்து வரும் லாஸ்லியா, யூடியூபர் ஹரி பாஸ்கருடன் இணைந்து Mr.Housekeeping படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் பிரமோஷனுக்காக பல நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு வருகிறார் லாஸ்லியா. தற்போது ஹெல்லோ டிசம்பர் என்று கூறி கிறிஸ்துமஸ் மரம் வைத்துள்ள வீடியோவோடு க்யூட் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறார்.