நடிகை ரம்யா கிருஷ்ணனால் மிகப்பெரிய சம்பவத்தை செய்யப்போகும் பிக்பாஸ்!! சீக்ரெட் ரூமில் பெண் போட்டியாளர்?
விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வரும் நிகழ்ச்சி பிக்பாஸ் சீசன் 6. கமல் ஹாசன் அவர்களால் தொகுத்து வழங்கப்பட்டு வரும் இந்த நிகழ்ச்சி தற்போது 80 நாட்களை கடந்து சென்று கொண்டிருக்கிறது.

தனலட்சுமி எலிமினேட்
கடந்த வாரம் யாரும் எதிர்ப்பார்க்காத அளவிற்கு தனலட்சுமி எலிமினேட்டாகி பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே அனுப்பட்டார். இதனை தொடர்ந்து இந்த வாரம் ப்ரீஸ் டாக்ஸ் நடைபெற்று போட்டியாளர்களின் குடும்பத்தினர் நண்பர்கள் வீட்டிற்குள் அனுப்பட்டு வருகிறார்கள்.
அந்தவகையில் இரவு போட்டியாளர் பேசிக்கொண்டிருக்கும் போது மைனா நந்தினி அவர்களிடம், ரம்யா கிருஷ்ணன் மேம் தனலட்சுமி போனதால் வருத்தப்பட்டதாக குடும்பத்தினர் கூறினர் என்று தெரிவித்தார். நிகழ்ச்சியை மாற்றுபவர் என்ற கோணத்தில் தனலட்சுமி பலருக்கு பிடித்திருக்கலாம் என்று அசீம் கூறியுள்ளர்.

வைல்ட் கார்ட்
இந்நிலையில் தனலட்சுமி வைல்ட் கார்ட்டில் பிக்பாஸ் வீட்டிற்குள் அனுப்பப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு காரணம் எலிமினேட் ஆகும் போட்டியாளர்களை டிஸ்னிபிளஸ் ஹாட்ஸ்டார் பேட்டி எடுத்து அதை இணையத்தில் வெளியிடுவார்கள்.
ஆனால் தனலட்சுமியை சீக்ரெட் ரூமிம் வைத்துள்ளதால் அவரை பேட்டி எடுக்கவில்லை என்றும் கூறப்படுகிறதாம். இதனால் இந்தவாரம் இறுதியில் தனலட்சுமி பிக்பாஸ் வீட்டிற்குள் மீண்டும் உள்ளே அனுப்படலாம் என்று கூறப்படுகிறது.
தனலட்சுமி வெளியே போனதுக்கு ரம்யா கிருஷ்ணன் மேம் ஃபீல் பண்ணாங்களாம்#RealWinnerDhana#Dhana #Dhanakshmi#UnfairEvictionDhana#DhanaDeservesBetter#MakkalSelviDHANA#BiggBossTamil#BiggBossTamil6 pic.twitter.com/C0Fwhql4Ni
— Tamil Beats Lyrics (@BeatsLyricsOffl) December 29, 2022