கேட்க நீ யார்!! அந்த விசயத்தில் வனிதாவையே மிஞ்சும் மகள் ஜோவிகா!! அசிங்கப்பட்ட பிக்பாஸ் விசித்ரா..
பிக்பாஸ் 7 சீசன் தற்போது 5 நாட்களை கடந்து சென்று மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ஆரம்பத்தில் இருந்தே நடிகை விசித்ரா பல விசயங்களில் மூக்கை நுழைத்து சர்ச்சையில் சிக்கினார். தற்போது வனிதா மகள் ஜோவிகாவிடம் அசிங்கப்பட்டுள்ளார் நடிகை விசித்ரா.
ஆரம்பத்தில் இருந்தே ஜோவிகா எனக்கு படிப்பு வரவில்லை, அதனால் 9 ஆம் வகுப்பு படித்துவிட்டு பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்தேன் என்றும் நடிப்பில் டிப்ளமோ முடித்திருப்பதாகவும் கூறியிருந்தார்.
12 ஆம் வகுப்பு வரை படித்திருக்கலாம். அதுதான் அடிப்படை தகுதி எங்கு சென்றாலும் 12 ஆம் வகுப்பு இருக்கிறது. நீ கஷ்டப்பட்டு 12 ஆம் வகுப்பை முடி என்ற கருத்தை ஜோவிகாவிடம் விசித்ரா கூறியிருந்தார். இதை ஜோவிகா தப்பாக எடுத்துக்கொண்டு அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
அது ஒருபடி மேல் சென்று இதை கேட்க நீ யார், கஷ்டப்பட்டேன் படித்தேன், என்னால் முடியவில்லை படுத்தால் தான் சாதிக்க முடியும் என்ற சட்டம் இல்லை, இந்த ஷோக்கு நான் தான் வந்தேன் என் அப்பா அம்மா, தாத்தா யாரும் வரலன்னு கத்த ஆரம்பித்திருக்கிறார் ஜோவிகா.
என்ன பத்தி பேசுறதா இருந்தா நீ பேசு என் பேக்ரெளண்ட் பத்தி பேசாதா? என்று கத்தி கோபத்தில் சென்றிருக்கிறார். இந்த விசயம் தற்போது இணையத்தில் வெடித்து வருகிறது.